tதமிழகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 13-ந்தேதி ஆரம்பம்,முழுவிவரம்

advertisement by google

திருச்செந்தூர்:முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.அன்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல், அங்கு தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.திருவிழா 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேள வாத்தியங்களுடன் சண்முக விலாசம் வருதலும், அங்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமி அங்கிருந்து மாலை 4 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடலுடன் மேள வாத்தியம் முழங்க சுவாமி சண்முக விலாசம் வருதல் நடக்கிறது. அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.கந்த சஷ்டி திருவிழா 8-ம்நாளான 20-ந்தேதி இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். திருவிழாவின் 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21, 22, 23-ந்தேதிவரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button