t

பாசிடிவ் விமர்சணத்தால் முதல் நாளே சாதனை படைத்த ‘ஜெயிலர்’ படம்;உலகம் முழுவதும் 7000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி சாதனை.

advertisement by google

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், முதல் நாளில் இந்தப்படம் 80 முதல் 100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலக முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 1200மேற்பட்ட திரையரங்குகளில் காலை முதல் காட்சி வெளியாகியது. சென்னையில் காலை 9மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது. உலகம் முழுவதும் 7000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் நேற்கு வெளியாகியது.

advertisement by google

advertisement by google

advertisement by google

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

advertisement by google

சென்னையை பொறுத்தவரை பிரதான திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. படம் வெளியாகும் சமயத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்று உள்ளார்.

advertisement by google

தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினியின் புகைப்படங்கள் நிறைந்த பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், பாட்டசு வெடித்தும், மேள தாளங்கள் வைத்து பாடல்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில், முதல் நாளில் இந்தப்படம் 80 முதல் 100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக படத்திற்கு குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் ‘ஜெயிலர்’ படம் மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

Related Articles

Back to top button