t

நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் பலாத்காரம் ஜனாத்தன சர்மா பகீர் பேட்டி?

advertisement by google

நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் பலாத்காரம்: ஜனார்த்தன சர்மா பகீர் பேட்டி.

advertisement by google

புதுடெல்லி: ‘‘நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து, அவர்களை அங்கேயே இருக்க கட்டாயப்படுத்துகின்றனர்’’ என்று ஜனார்த்தன சர்மா குற்றஞ்சாட்டி உள்ளார். நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து மகள்களை மீட்கக்கோரி புகார் அளித்த ஜனார்த்தன சர்மா டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:எனது குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று ஆசையுடன் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வந்தேன். நான் ஒரு நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றி வந்தேன். அதன் பிறகு அங்கு சிஇஒவாக பதவி உயர்ந்தேன். இந்த காலக்கட்டத்தில், பெங்களூருவில் நித்தியானந்தா ஆசிரமத்தில் குருகுலம் ஒன்று இருப்பது எனக்கு தெரியவந்தது. அது பணம் கட்டி படிக்கக்கூடிய பள்ளி. மிகவும் ஆசைப்பட்டு அதில் என் குழந்தைகளை சேர்த்தேன். மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை சேர்த்தேன். 3 வருடங்களில் என் குழந்தைகளுக்கு அற்புதமான சக்தி கிடைத்திருப்பதாக சொன்னார்கள். அதில் ஈர்க்கப்பட்ட என்னையும் நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து கொள்ளுமாறு கூப்பிட்டார்நான் அப்போது வசதி வாய்ப்புகளுடன் இருந்தேன். நல்ல பதவியில் இருந்தேன். நான் எல்லாவற்றையும் ஒப்படைத்து இனிமேல் நம் வாழ்க்கை மடத்தோடு தான் என்று முடிவுக்கு வந்து, அவர் (நித்தியானந்தா) தான் எல்லாமே என்று சொல்லி ஆசிரமத்தில் இணைந்தேன். இதற்கு என் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எல்லாவற்றையும் மீறி தான் நான் ஆசிரமத்தில் இணைந்தேன்.

advertisement by google

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு என்னை அவரின் செயலாளர்களில் ஒருவராக நியமித்தார். என்னுடைய வேலை, நித்தியானந்தாவுக்கு நற்பெயரை உருவாக்க பெரிய விஐபிக்களை சந்திக்க வேண்டும். 2016, 17ல் பல ஊர்களுக்கு சென்று விஐபிகளை சந்தித்து நித்தியானந்தாவை பற்றி எடுத்து கூறினேன். 2018ல் நித்தியானந்தா சட்டப்பிரச்னை காரணமாக அங்கிருந்து புறப்பட்டார். அதன்பிறகு ஆசிரமத்தில் நிறைய தடுமாற்றங்கள் ஏற்பட்டது.

advertisement by google

வெளிநாடுகளில் நித்தியானந்தா ஆன்மிக சுற்றுப்பயணம் செய்வார். அப்போது அவருடன் பங்கேற்போர்களிடம் ஒரு நபருக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிப்பார். இந்த சுற்றுப்பயணங்களுக்காக எனது முதல் மற்றும் இரண்டாவது மகள்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்படி சில நாடுகளுக்கு என் குழந்தை உள்பட 12, 15, 16 வயது பெண் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் வேலை என்னவென்றால், எங்கள் சுவாமியால் என்ன மாதிரியான சக்தியும் கொடுக்க முடியும் என்று மார்க்கெட்டிங் செய்வார்கள்.இப்படி போன போது தான் என்னுடைய பெரிய மகள் திரும்ப வரவில்லை. சுவாமியும் எந்த ஊர் போயிருக்கிறார் என்று தெரியவில்லை. நான் ரஞ்சிதாவிடம் கேட்டபோது வரவில்லையா, தெரியவில்லையே என்றார். என் மகள் குறித்து ஆறு மாத காலம் எந்த தகவலும் தெரியவில்லை. யாரிடம் கேட்டும் எந்த பதிலும் இல்லை. கேட்டால் அவள் மேஜர் தானே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்கள். இதனிடையே என்னுடைய 2வது மற்றும் 3வது பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தார்கள். 3வது பெண்ணிடம் பாஸ்போர்ட் இல்லை. என்னிடம் பாஸ்போர்ட் கேட்டபோது தான் இந்த விஷயம் எனக்கு தெரிந்தது. இதை எதிர்த்து நான் பெரும் பிரச்னை செய்தேன். நான் கேள்வி கேட்பதை உணர்ந்த அவர்கள், என்னை கார்னர் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்பிறகு எனது மகள்களை டெல்லியில் ஆன்மிக பிரசாரத்தில் சந்தித்தபோது சில பிரச்சனைகள் இருப்பதை சொன்னார்கள்.இதற்கிடையே எனது மகளை போல் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள எல்லாம், எங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதனால் அகமதாபாத் ஆசிரமத்திற்கு குழந்தைகளை மாற்றினர்.
என் மனைவி குழந்தைகளை பார்ப்பதற்காக அகமதாபாத் போயிருக்கிறார். ஆனால் அங்கு அவரை உள்ளே விடவில்லை. சுமார் 4 மணி நேரம் கேட்டு வாசலிலில் நின்று என் மனைவி போராட்டம் செய்த பிறகு, என்னுடைய 3 குழந்தைகளையும் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். சுமார் 15 நிமிடம் பேச அனுமதித்ததுடன் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து குழந்தைகளை அழைத்து செல்ல முடிவு செய்த நான் வாரணாசியில் இருந்து அகமதாபாத் சென்றேன். வழியிலேயே எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்தது. ஆசிரமத்தில் என்னையும் குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கவில்லை. நான் சண்டை போட்டு உள்ளே போனால் என்னுடைய இரண்டு குழந்தைகளை மட்டும் சந்திக்க அனுப்பினார்கள். பெரிய குழந்தையை அனுப்பவில்லை. கேட்டால் 18 வயது ஆகிவிட்டது அவள் உங்களை பார்க்க விரும்பவில்லை என்றார்கள்.என் குழந்தைகளை அழைத்துச்செல்லவும் அவர்கள் அனுமதிக்கவிலலை. இதனால் வேதனை அடைந்த நாங்கள் அகமதாபாத்தில் போலீசில் புகார் அளித்தோம். அதன்பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரவு 8 மணி அளவில இரண்டு குழந்தைகளை அனுமதித்தனர். அங்கு நடந்த அருவருப்பு சம்பவங்கள் குறித்து அப்போது தான் தெரியவந்தது. என் பெண் இரண்டு மூன்று முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக சொன்னார். அந்த பலாத்காரம் மைனராக இருக்கும்போது நடந்திருக்கிறது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ளேன். என் மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜனார்த்தன சர்மா கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button