தொழில்நுட்பம்

முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் வரையிலான தூரம் செல்லும் கியா EV9 மாடல் கார்✍️ ஆறு மற்றும் ஏழு இருக்கை வடிவில்✍️முழுவிவரம்?விண்மீன்நியூஸ்?

advertisement by google

கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய EV9 மாடல் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். ஆறு மற்றும் ஏழு இருக்கை வடிவில் இந்த எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது WLTP பரிசோதனையில் கிடைத்த முடிவுகள் ஆகும். அன்றாட பயன்பாடுகளின் போது, வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் காரின் ரேன்ஜ் வேறுப்படும். இத்துடன் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 239 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். அளவீடுகளை பொருத்தவரை கியா EV9 மாடல் 5 மீட்டர்கள் நீளமாக இருக்கிறது. கியா நிறுவனம் இதுவரை உருவாக்கியதிலேயே நீண்ட பயணிகள் வாகனம் இது ஆகும். HMG-யின் பிரத்யேக பேட்டரி எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது கார் இது.இதன் அகலம் 1980mm, உயரம் 1750mm மற்றும் வீல்பேஸ் 3100mm அளவில் உள்ளது. இதன் பூட் பகுதியில் 828 லிட்டர்கள் அளவுக்கு ஸ்டோரேஜ் வசதியை வழங்குகின்றன. இதன் 6/7 சீட்டர் மாடலில் இருக்கைகள் நேராக இருக்கும் போது 333 லிட்டர்கள் அளவுக்கு ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ரியர் வீல் டிரைவ் அல்லது ஆல் வீல் டிரைவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.இரண்டு வேரியண்ட்களிலும் 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ரியர் வீல் டிரைவ் மாடலுடன் 150 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.4 நொடிகளில் எட்டிவிடும். கியா EV9 மாடலை 800-வோல்ட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ரியர் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சம் 239 கிலோமீட்டர்களும், ஆல் வீல் டிரைவ் வெர்ஷன் 219 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button