பக்தி

கோவில்பட்டி அருள்மிகுசெண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா✍️ இரவை பகல் ஆக்கிய தெப்பத்தேர்திருவிழா ,நாடார் உறவின்முறைச்சங்கங்களின் சார்பில் கோயில் தெப்பத்தில் தேர் உழா✍️ கோயில் தெப்பத்தில் சுவாமியும், அருள்மிகு செண்பகவள்ளி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருள்மிகுசெண்பகவல்லி அம்மன் கோவில் 11ஆம் திருநாள் தெப்பத்தேர் திருவிழா

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன்திருக்கோவிலில் திருவிழாவின் நிறைவு நாளுக்கு பின்பு, இரவு நாடார் உறவின்முறைச்சங்கங்களின் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
அருள்மிகு செண்பவள்ளியம்மன் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொருநாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றன. 9ஆம் திருநாளான வியாழக்கிழமை தேர் திருவிழாவும், 10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி தீபாராதனையும் நடைபெற்றது.
பதினொன்றாம் திருநாளான சனிக்கிழமை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. 11 ஆம் திருநாள் அன்று கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்பு சுவாமி, அம்பாள் திருவீதியுலா கோவில்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அருள்மிகு செண்பள்ளி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தெப்பத்தேர்திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது.
தெப்பத்தேர்திருவிழாவில் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா, பொதுப்பணி துறை உதவி கோட்டப் பொறியாளர் பரமசிவம், கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபால், பொருளாளர் சுரேஷ்குமார், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா மாரியப்பன், நகர் மன்ற துணைத் தலைவர் ஆர் .எஸ்.ரமேஷ் , அமலி பிரகாஷ், நாடார் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைபள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் , செக்கடித்தெருவிலுள்ள நாடார் நடுநிலைபள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், காமராஜர் மெட்ரிக் மேல்நிலைநிலைப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் , காமராஜ் நடுநிலைபள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், காமராஜ் CBSC பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,SS துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தெப்பத் திருவிழா கமிட்டியின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டு இரவு நேர தெப்பத்தேர்திருளாவை பகல் ஆக்கினர் , திருவிழா இனிதே சிறப்பாக நிறைவுற்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button