தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் கி.ரா. நினைவரங்கத்தில் … குடி நீர் வசதி வேண்டியும்… நூலகத்தில் படிக்க போதிய நூல்கள் வேண்டியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில்-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காலிகுடங்களுடன் போராட்டம்….✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

குடி நீர் வசதி இல்லை… நூலகத்தில் படிக்க போதிய நூல்கள் இல்லை – கி.ரா. நினைவரங்கத்தில் …

advertisement by google

காலி குடங்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்….

advertisement by google

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி, கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன். தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரை கி.ரா. என்று அன்புடன் அழைப்பது வழக்கம். அவரை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி நகரின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா.நினைவரங்கம் மக்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்துள்ளது. தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மட்டுமின்றி பொது மக்களும் நாள்தோறும் கி.ரா நினைவு அரங்கத்தினை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பள்ளி ,கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர். கோவில்பட்டி பகுதிமட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சாத்தூர், தென்காசி பகுதிகளில் இருந்து மக்கள் கி.ரா.நினைவரங்கத்தினை பார்வையிட்டு செல்கின்றனர்.

advertisement by google

அனைவரையும் கவர்ந்துள்ள கி.ரா. நினைவரங்கத்தில் சில அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

advertisement by google

குறிப்பாக குடிநீர் வசதி இல்லை. இதனால் வருகை தரும் மக்கள் குடிநீர் குடிக்கமால், குறிப்பாக பள்ளி குழந்தைகள் அவதிப்படும் நிலை உள்ளது.

advertisement by google

டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த தொடு திரையில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். நூலகத்தில் புத்தகங்கள் கண்ணாடி பேழையில் காட்சிக்கும் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. கி.ரா எழுதிய புத்தகங்கள் அனைத்தும் வரக்கூடிய பார்வையாளர்கள் படிக்கும் வகையில் நூலக வசதி மேம்படுத்த வேண்டும்,

advertisement by google

மேலும் நினைவரங்கத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகள் காய்ந்து சருகு போன்று காட்சியளிக்கிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் காலை, மாலை புல்வெளியில் தண்ணீர் விட்டாலும், பசுமை இல்லமால் காய்ந்த சருகு போன்று காட்சியளிக்கும் நிலை இருப்பதால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,

advertisement by google

இயற்கை உபாதைகள் கழிக்கும் அறைகள், நினைவரங்க அலுவலக அறை இருப்பதால் பொது மக்கள் பயன்படுத்தில் சிரமம் இருப்பதால், அதனை தனியாக வெளியே அமைத்தால் நன்றாக இருக்கும்

இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைப் போன்று நான்காவது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவின் போது , கோவில்பட்டியில் உள்ள கி.ரா. நினைவரங்கத்திலும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

எனவே நகரின் மையத்தில் அழகுற காட்சியளிக்கும் கி.ரா. நினைவரங்கத்தில் குடிநீர் வசதி, மக்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகம், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் கி.ரா. நினைவரங்கம் பொழிவு பெறுவது மட்டுமின்றி மக்கள் கூட்டம் அதிகரிக்கும். எனவே கி.ரா நினைவரங்கத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காலிகுடங்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில். அதன் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். , மேலும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.

இந்த போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, நகர பொருளாளர் செண்பகராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர துணைத் தலைவர்கள் வின்சென்ட், சுப்புராஜ், நகரச் செயலாளர்கள் மணிமாறன், சரவணன், இளைஞரணி துணைத் தலைவர் பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button