தமிழகம்

டிக்டாக், பேஸ்புக், யூடியூப் முதல் பிக் பாஸ் வீடு வரை.. ஜிபி முத்துவின் வாழ்க்கை பயணம் இதோ உங்களுக்காக✍️பிக் பாஸ் சீசன் 6 போட்டி நேற்று விஜய் டிவியில் கோலாகலமாக தொடக்கம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

டிக் டாக் முதல் பிக் பாஸ் வீடு வரை.. ஜிபி முத்துவின் வாழ்க்கை பயணம் இதோ உங்களுக்காக..

advertisement by google

பிக் பாஸ் சீசன் 6 போட்டி நேற்று விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கியது. இதில் சுமார் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் போட்டியாளராக பிரபல டிக் டாக்கர் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

advertisement by google

ஜிபி முத்து பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு சாதாரணமான மனிதர். சமூக வலைத்தளங்களின் உதவியால் குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

டிக் டாக் மூலமாக அறிமுகமாகி யூடியூப்பில் வைரலாகி தற்போது சில சினிமா படங்களில் நடிகராக வலம் வருபவர் ஜிபி முத்து. தமிழகத்தில் தற்போது சினிமா நடிகர்களுக்கு இணையாக மக்கள் மனதில் வலம் வருகிறார். 

advertisement by google

மிகவும் எளிமையானவர். அழகான நெல்லைத் தமிழில் எதார்த்தமாக பேசக் கூடியவர். சிறுசு முதல் பெருசு வரை இவரை தெரியாத ஆள் ஒருவரும் இல்லை என கூறலாம். யூடியூப் வீடியோக்கள் முதல் மீம்ஸ் வரை இவர் இல்லாத இடம் இல்லை. பிறரை கலாய்ப்பதற்கும்,திட்டுவதற்கு இவரின் இக்ஸ்பரசன் கொண்ட முகம் தேவைப்படுகிறது. மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளார் ஜிபி முத்து.

advertisement by google

தனது ஆரம்பகால வாழ்க்கையில் சிறு சிறு தொழில்கள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவர், பின் கொரோனா காலகட்டத்தில் வேலைகள் முடங்க வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டார். அப்போது தமிழகத்தில் டிக் டாக் மிகவும் பிரபலமாக இருந்த நேரம்.

advertisement by google

வருமானம் இன்றி தவித்த ஜிபி முத்து டிக் டாக் பக்கம் தனது கவனத்தை செலுத்தினர். கவலையை மறக்க டிக் டாக் பக்கம் திரும்பிய ஜிபி முத்து தினமும் சுமார் 70 முதல் 80 வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அவரது வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. ஆனால், டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டால் குடும்பத்துக்கு யார் சாப்பாடு போடுவது.மிகவும் மனம் நொந்து போன ஜிபி முத்து விஷம் அருந்திவிட்டார்.

advertisement by google

ஜிபி முத்து விஷம் அருந்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுதீயாக பரவ ஊடகங்களும் இவரின் நிலையை திரையிட்டு காட்டியது. தமிழக மக்கள் பலரும் வருந்தினர், சிலர் “இவருக்கு இது தேவைதான்” எனவும் கூறினார்.

விஷம் அருந்திய ஜிபி முத்தை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் 5 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜிபி முத்து குணமடைந்து வீடு திரும்பினார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

வீடு திரும்பிய ஜிபி முத்துக்கு அடுத்த திருப்புமுனை காத்திருந்தது. அவருக்கு லெட்டர் பார்சல் ஒன்று வந்தது. அதில் அவரை கலாய்த்து சிலர்  எழுதியிருந்தனர். இதனை கண்டு முதலில் கோவப்பட்ட ஜிபி முத்து, அப்படி எழுதியவரை எலே செத்த பயலே என்று நெல்லை பாஷையில் திட்டி அதையே வீடியோவாகப் போட அந்த வீடியோ பெரும் வைரலாக மாறியது.

அதன் பிறகு ஜிபி முத்து டிக் டாக் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார். இவரின் வீடியோவை ரசிகர்கள் அதிகமானோர் விரும்பி ரசிக்க வீடியோக்கள் அதிகமானது. அதோடு சப்ஸ்கிரைபர்களும் அதிகரித்தனர் பின்தொடர்ந்தனர்.  மிக வேகமாக முன்னேறிய முத்து தற்போது 1.2 மில்லியன் சப்ஸ்கிரைபர் வைத்துள்ளார்.  

கொரோனா பலரின் வழக்கைக்கு முடிவு கட்டினாலும் சிலரின் வாழ்க்கைக்கு ஆரம்பமாக அமைந்தது.அதற்கு எடுத்துக்காட்டு ஜிபி முத்து. தற்போது இவர் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button