தமிழகம்

அரசுமருத்துவமனைகளில் பணியில் மெத்தனம் காட்டுபவர்களை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள்- துரைமுருகன் ஆவேசம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

அரசுமருத்துவமனைகளில் பணியில் மெத்தனம் காட்டுபவர்களை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள்- துரைமுருகன் ஆவேசம் ,வேலூர் மாவட்டம், பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவர கூறினர். பாம்பு கடிக்கு மருந்தில்லை ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது. இங்கிருந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறினார்கள். மேலும் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை என தெரியவந்தது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் தவறு செய்பவர்களை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள். அப்போதுதான் ஒழுங்காக பணியாற்றுவார்கள் என ஆவேசமாக கூறினார்.இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- பொன்னை ஒரு பெரிய ஊராட்சி இவற்றை சுற்றி 20 கிராமங்கள் உள்ளன. பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை நம்பிதான் அனைத்து பொதுமக்களும் உள்ளனர்.இது போன்ற மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காகவும், தரம் உயர்த்துவதற்காகவும் அடிப்படை வசதிகளை செய்து தர ஆய்வு செய்யப்பட்டது என்றார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- பொன்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து இங்கு மருத்துவ அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகிய பணியிடங்களில் பணிபுரிபவரை மாற்றுவதற்கு தகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடனடியாக இங்கு நிரந்தரமான மருந்தாளுநரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் எக்ஸ்ரே பல் மருத்துவத்திற்கு தேவையான ஒரு மருத்துவர் போன்ற நியமனங்களை உடனடியாக அமைந்து ஒரு தகுதி வாய்ந்த மருத்துவமனையாக அமைக்கப்படும். பொன்னையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையாக உள்ளது. 2017-ல் கூடுதல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கட்டிடத்தில் இதுவரை குடிநீர் வசதியும், சரியான மின்வசதியும் கொடுக்கப்படாத நிலையில் இருந்து உள்ளது. தற்போது. கலெக்டர் குடிநீர் வசதி செய்து தந்துள்ளார். மின்வசதிக்காக இரண்டு நாட்களில் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னை மருத்துவமனையில் பாழடைந்து உள்ள கட்டிடங்களை இடித்து விட்டு வரும் நிதியாண்டில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகளை தயாரித்து அரசுக்கு அனுப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதியதாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலூர்.தென்காசி, போன்ற இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுபாடு அரசு மருத்துவமனைகளில் கிடையாது.38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகள் உள்ளது. மருந்துகள் இல்லாத இடத்தில் 104 என்ற இலவச எண்ணிற்கு அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button