தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

என்மகளை அடித்தே கொன்றுவிட்டார்கள்?போலீசார் குவிப்பு ?

advertisement by google

advertisement by google

என் மகளை அடித்தே கொன்றுவிட்டார்கள்

advertisement by google

என்று இளம்பெண் கார்த்திகாவின் மரணம் குறித்து பெற்றோர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்

advertisement by google

இதனால் செந்துறை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.*

advertisement by google

செந்துறை அருகே மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்

advertisement by google

இவருக்கு வயது 27 வயதாகிறது…

advertisement by google

ஈபி ஆபிசில் வேலை பார்த்து வருகிறார்

advertisement by google

இவருக்கும் செந்துறையை சேர்ந்த கார்த்திகாவிற்கும் போன வருடம் பிப்ரவரி மாதம் கல்யாணம் ஆனது

கார்த்திகாவுக்கு 23 வயதாகிறது.. ஆனால் கல்யாணம் ஆகி ஒரு சில மாதங்கள்தான் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்…

இவர்களுக்குள் வெடித்தது சண்டை.. தினமும் தகராறாகவே இருந்தது

இந்நிலையில் சம்பவத்தன்று, கார்த்திகா பொன்பரப்பியில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் ஒருவரின் வீட்டு கல்யாணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார்

வீட்டுக்குள் நுழைந்த உடனேயே தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது

என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

விடிந்ததும் கார்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரபாகரன் தகவல் சொன்னார்.

இதை கேள்விப்பட்டு கார்த்திகாவின் பெற்றோர் அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர்

*கருப்பு சட்டையுடன்.. ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் உண்ணாவிரதம்.. திடீர் பரபரப்பு!

தகவலறிந்து செந்துறை போலீசாரும் வந்துவிட்டனர்..

பிரபாகரன் தான் தன் மகளை அடித்துக் கொலை செய்து விட்டதாக ஆவேசமாக கூறி… அவரது வீட்டை அடித்து உடைத்தனர்

போலீசார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தால், அவர்களை தடுத்திய நிறுத்திவிட்டனர்.

எனினும் ஆத்திரம் தீராத கார்த்திகாவின் உறவினர்கள், வீட்டில் கிடத்தப்பட்டிருந்த அவரது உடலை பொன்பரப்பிக்கு எடுத்து செல்வதாக கூறி சடலத்தை சரக்கு வேனில் ஏற்றினர்

ஆனால் போலீசார் இதையும் தடுத்து நிறுத்தியதால், சிறிது நேரம் அங்கே தள்ளு-முள்ளு ஏற்பட்டது

உடனடியாக சரக்கு வேனில் ஏற்றப்பட்ட சடலத்தை எடுத்து கொண்டு வந்து வீட்டுக்குள்ளே வைத்தனர்

ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து, அதில் கார்த்திகாவின் உடலை ஏற்றி அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்

இப்போது பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்

அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. உண்மையிலேயே கணவன்-மனைவிக்கு என்ன தகராறு என்று தெரியவில்லை.அதேபோல, கார்த்திகா மரணம் தற்கொலையா, கொலையா என்றும் முடிவாகவில்லை. எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியவரும் என்கிறார்கள். பெண் வீட்டு தரப்பில் ஆவேசமும், கடுங்கோபமும் உள்ளதால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button