இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

போலீஸ் வேட்டை துவங்கியது ரூம்நம்பர் 106ல், லலிதா ஜீவல்லர்ஸ் விவகார விசாரணை

advertisement by google

advertisement by google

ரூம் நம்பர் 106 = இங்குதான் வட மாநில இளைஞர்கள் 6 பேர் தங்கி இருந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் போலீசாரை பார்த்ததும், எகிறி குதிக்க முயன்றும், மொத்த பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

advertisement by google

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை விவகாரத்தில் இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை தற்போது நடந்து வருகிறது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகேதான் லலிதா ஜூவல்லரி கடை உள்ளது. இது பண்டிகை காலம் என்பதால் புது டிசைன் நகைகள் கடைக்குள் இருந்தன. நேற்று காந்தி ஜெயந்தி லீவு என்பதால், கஸ்டமர்கள் நிறைய பேர் நகை வாங்க வருவார்கள் என்று எண்ணி, என்னைக்கும் இல்லாமல் இன்றைக்கு சீக்கிரமாக ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போதுதான் கடை கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது தெரியவந்தது.லெட்ஜர் பாதி.. ருத்ரா மீதி.. லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள்.. பழைய டெக்னிக் வைத்து ஷாக்கொள்ளை6 நைட் டியூட்டி வாட்ச்மேன்கள் இருந்தும், அத்தனை சிசிடிவி காமிராக்கள் இருந்தும், இந்த கொள்ளை துணிகரமாக நடந்துள்ளது. கடைக்கு பின்னாடி ஏசி மெஷின்கள் அமைக்கப்பட்டிருந்த சுவர் வழியாகத் ஓட்டை போட்டு கடைக்குள் குதித்துள்ளனர் மர்மநபர்கள். கீழ்தளத்தில் உள்ள நகைகளை சுத்தமாக துடைத்தெடுத்து கொண்டுதான், முதல் மாடிக்கு சென்று அங்கும் வேலையை காட்டி உள்ளனர்.முகமூடிமுகமூடி, கிளவுஸ், ஜர்கின், குல்லா என முகத்தை மறைத்து கொண்டு மர்மநபர்கள் கோடிக்கணக்கான நகைகளை அபேஸ் பண்ணி உள்ளனர். கொள்ளையர்கள் அநேகமாக வட மாநிலத்தவர்களாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இதற்கெனவே அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி மாநகரமே நேற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.ரூம் நம்பர் 106ஹோட்டல்கள், லாட்ஜகளில் தீவிர வேட்டை நடத்தப்பட்டது. இதனால் நகருக்குள் ஒருவித பதற்ற சூழல் நிலவியது. திருச்சி மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்துதான், சிலர் புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்றிருப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர். டைமன்ட் லாட்ஜில் 2-வது மாடி, ரூம் நம்பர் 106-ல் ஒரு வட மாநில கும்பல் தங்கி இருப்பது தெரியவந்தது.சுற்றி வளைப்புஇதையடுத்து போலீசார் முதல்வேலையாக அந்த பகுதியில் கரண்டை கட் செய்தனர். பின்னர், அந்த ரூமுக்குள் நுழைந்து, அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்தனர். இவர்கள் எல்லாருமே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அந்த ரூமில் சோதனையிட்ட போது 10-க்கும் மேற்பட்ட பைகள் கிடந்தன. ஆனால் அவைகளில் எதுவுமே இல்லை.தப்ப முயற்சிஅவர்களிடம் விசாரணை நடந்து கொண்டே இருந்தபோது, அப்துல்லா சேக் என்பவன் நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு, ரூமுக்குள் நுழைய முயன்றான். ஆனால் போலீசாரை பார்த்ததும், அதிர்ச்சியாகி, 2 வது மாடியில் இருந்தே கீழே குதித்து தப்ப முயன்றான். இதில், அவனது தலை தரையில் மோதி பலமாக அடிபட்டது.ரகசிய அறைஇதையடுத்து, புதுக்கோட்டை ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்து, அங்கு அப்துல்லாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 5 பேரையும் போலீசார் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.வங்கி கொள்ளைகைவரிசையை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என போலீசார் உறுதி செய்துள்ளனர். அது மட்டுமில்லை.. போன வருஷம், திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கி சுவரில் துளை போட்டு லாக்கரில் இருந்த ரூ.5 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களே இந்த கொள்ளையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இரு சம்பவமும் ஒரே மாதிரி நடந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.முகமூடிஅதனால் இன்னும் 2 நாட்களில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்துவிடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகேதான் அந்த முகமூடியை வாங்கியதாக சொல்கிறார்கள். ஆனால் யாரிடம் வாங்கினார்கள் என்று தெரியவில்லை. இந்த புள்ளியில் இருந்துதான் போலீசாரின் விசாரணை தீவிரமாகி வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button