t

தங்கத்தை விட ஏலத்தில் மிகஅதிகமாக 120 மடங்கு விலை போன விண்கல்லின் பாகங்கள்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்✍️

advertisement by google

தங்கத்தை விட ஏலத்தில் அதிகமாக விலை போன விண்கல்லின் பாகங்கள்*

advertisement by google

கடந்த ஆண்டு இங்கிலாந்தின் வின்ச்காம்ப் நகரில் விழுந்த விண்கல்லின் சிறியப் பகுதி, அதே எடை உள்ள தங்கத்தின் விலையை விட 120 மடங்கு அதிகமாக ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

advertisement by google

1.7 கிராம் உள்ள இந்த கறுப்பான பாறை வடிவப் பகுதி, அதன் விற்பனைக்கான மதிப்பீட்டை மிக அதிகமாக, (£9,256 ) 12,600 டாலர் மதிப்பில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

advertisement by google

இரண்டாவது பாகம் 20 ஆயிரம் பவுண்டு என்ற மதிப்புக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் ஒரு கிராமின் மதிப்பு முதலாவதை விட குறைவாகவே இருந்தது.

advertisement by google

பிரிட்டனில், வின்ச்காம்ப் விண்கல் இதுவரை மீட்கப்பட்ட மிக முக்கியமான விண்வெளிப் பாறையாக அறிவியல் ரீதியாகக் கருதப்படுகிறது.

advertisement by google

சூரிய குடும்பத்தின் உருவாக்கக் காலத்தின் பழமைதன்மை கொண்ட வேதியியலைக் (pristine chemistry) கொண்டுள்ளது.

advertisement by google

கோட்ஸ்வோல்ட் ( Cotswold) நகரத்தில் விழுந்த இந்த விண்கல், லண்டன் ஏலமான கிறிஸ்டிஸின் வருடாந்திர அரிய மற்றும் அசாதாரண விண்கற்கள் ஏலத்தில் மிக முக்கிய பொருட்களில் ஒன்றாகும்.

advertisement by google

சில பாகங்கள் அவற்றின் விற்பனைக்கான மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தன. மற்றவை அப்படி இருக்கவில்லை.

2013 ஆம் ஆண்டு, ரஷ்ய நகரமான செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) மீது வெடித்த விண்கல்லில் இருந்து விழுந்த சிறிய பாகங்களின் மதிப்பு கிட்டத்தட்ட 3,000 பவுண்ட் ஆகும். இந்த பாகங்களின் மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வானத்தில் உள்ள கண்கவர் ஒளியை உண்டாக்கி, அதிலிருந்து வரும் விண்கல்லுக்காக, செல்யாபின்ஸ்க் நகரம் நினைவுகூரப்படுகிறது. இதனை அங்குள்ள எண்ணற்ற வாகன டாஷ்கேம் ரெக்கார்டர்களில் (dashcam recorder) பதிவு செய்தது.

ஆனால், 2019 ஆம் ஆண்டு, கோஸ்டாரிகாவில் ஒரு விண்கல்லால் தாக்கப்பட்ட நாய்க்குடில் ஏல பார்வையாளர்களை ஏமாற்றமடையச் செய்தது. இது 220,000 பவுண்டு ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது 32,000 பவுண்டுக்கு சற்று அதிகமாக ஏலத்தில் எடுக்கப்படலாம். அதுவே, ரோக்கி என்ற தி ஜெர்மன் ஷெப்பர்ட் குடிலின் தகரக் கூரையில் துளையிட்ட விண்கல் பாகம் பாதியாக 15,700 பவுண்டாக ஏலத்தில் எடுக்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெடித்த ஒரு விண்கல், பின்னர் வடமேற்கு ஆப்ரிக்கா பகுதியில் விழுந்தது. இது ஒரு தொடக்க ஏலத்தில் கூட பதிவு செய்யவில்லை. வெறும் 300,000 பவுண்டு குறைவாக ஏலத்தை தொடங்குவதற்கு கேட்கப்பட்டது.

இங்கிலாந்தின் தெற்கு பகுதியில், வானம் முழுவதும் நெருப்பு பந்துகளின் பந்தயம் போல் இருப்பதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து கிட்டதட்ட ஒரு வருடமாகிறது.

இந்த விண்கல் கூளம், இறுதியாக வின்ச்காம்ப் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு வசிப்பவர்கள், தோட்டங்கள், பாதைகள் மற்றும் உள்ளூர் வயல்களில் இருந்து எரிந்த எச்சங்களை துடைத்து, லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் (NHM) தேசிய சேகரிப்புக்கு பத்திரமாக வழங்கினர்.

அவர்கள் ஒரு சாத்தியமான அதிர்ஷ்டகாரமான பொருட்களை விட்டுக்கொடுக்கிறார்கள் என்பதை அறிந்தே செய்தனர்.

இரண்டு சிறிய மாதிரிகளுக்கு புதன்கிழமையன்று கிறிஸ்டியில் ஏலம் எடுத்த ஆயிரக்கணக்கான பவுண்டு அதன் மதிப்பை காட்டுகிறது.

வின்ச்காம்ப் விண்கல் என்பது CM2 கார்பனேசியஸ் காண்ட்ரைட் (CM2 carbonaceous chondrite ) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உட்பட கிரகங்கள் எவ்வாறு உருவானது என்பதற்கான தடயங்களை வழங்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வின்ச்காம்ப் அருகே சேகரிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை – 90 சதவீதத்திற்கு அதிகமானவை – இப்போது ஒரு பொது சொத்தாக உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

விண்கல்லின் 100 கிராம் எடையுள்ள பாகம் பார்வையாளர்கள் பார்க்க, இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டிஸ் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் விண்கல் விற்பனையை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நிகழ்வில் உள்ள பல விண்கற்கள் மகோவிச் (Macovich) சேகரிப்பில் இருந்து வந்தவை. அதன் கண்காணிப்பாளர் டாரில் பிட் இந்த பொருட்களின் அழகை பாதுகாத்தார்.

அவற்றில் சில பார்ப்பதற்கு உண்மையில், பிரமிக்க வைக்கின்றன. அவை இயற்கையால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்.

“பெரும்பாலான விண்கற்கள், காலத்தின் தொடக்கத்தில் உள்ள கலைப்பொருட்கள்; அழகியல் ரீதியாக உன்னதமான ஒரு விண்கல்லை விட வசீகரிக்கும் பொருள்கள் மிகக் குறைவு” என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button