t

யானை திரைப்படமா✍️ எதிர்பார்ப்பிற்கு உள்ளான அருண் விஜய் -ஹரி கூட்டணி… யானை படத்தின் டீசர் வெளியீடு*✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

எதிர்பார்ப்பிற்கு உள்ளான அருண் விஜய் -ஹரி கூட்டணி… யானை படத்தின் டீசர் வெளியீடு*

advertisement by google

சென்னை : நடிகர் அருண் விஜய் முதல்முறையாக ஹரியுடன் கூட்டணி அமைத்து உருவாகியுள்ள படம் யானை.

advertisement by google

சிங்கம் படங்களின் வெற்றியை அடுத்து தற்போது ஹரி யானையை கையில் எடுத்துள்ளார்.

advertisement by google

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

advertisement by google

நடிகர் அருண் விஜய் தன்னுடைய தங்கை கணவருடன் முதல்முறையாக இணைந்துள்ள படம் யானை. சிங்கம் படங்களின் வெற்றியை அடுத்து தற்போது யானை படத்தை இயக்கியுள்ளார் ஹரி. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

advertisement by google

படத்தில் அருண் விஜய்க்கு நாயகியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி, கேஜிஎப் பட வில்லன் ராமசந்திர ராஜு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

advertisement by google

படத்தின் அருண் விஜய்யின் அண்ணனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார் கோபிநாத். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

advertisement by google

படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், விரைவில் படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படம் கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. டீசரில் பிள்ளையார் சிலையை எடுத்துவரும் அருண் விஜய், அதை வைத்துவிட்டு எதிரிகளை பந்தாடுகிறார்.

மழை பின்னணியில் டீசர் சிறப்பாக அமைந்துள்ளது. முன்னதாக படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள், இந்த டீசர் வெளியீடு குறித்து தனித்தனியாக வீடியோ வெளியிட்டிருந்தனர். அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், முன்னதாக அருண் விஜய்யின் பார்டர் படம் முதலில் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக சினம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே யானை படம் ரிலீசாக உள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button