t

ஆம்பூர் அருகே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து நேற்று தற்கொலை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஆம்பூர் அருகே காதலன் தற்கொலை செய்து கொண்டதால் பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை*

advertisement by google

ஆம்பூர் அருகே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

advertisement by google

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு சின்னதாய் தெருவைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் ரமணன்(22). எலெக்ட்ரிஷீயனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த சாமி நாதன் மகள் பிரியங்காதேவியும் (16), ரமணனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரியங்கா தேவி அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

advertisement by google

இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை நாளடைவில் உணர்ந்த காதலர்கள் பிரிய எண்ணினர். நேற்று முன்தினம் மாலை காதலர்கள் சந்தித்து பேசியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட தாக தெரிகிறது.

advertisement by google

இதில், காதலியுடன் சண்டையிட்டு வீட்டுக்கு சென்ற ரமணன் அன்றிரவு அவரது வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

advertisement by google

தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் அங்கு சென்று ரமணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமணன் தற்கொலை செய்து கொண்ட தகவல் பிரியங்காதேவிக்கு தெரிய வந்தது. இதனால், மனமுடைந்த பிரியங்காதேவி வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே தண்ட வாளம் அருகே சென்றார்.

advertisement by google

அப்போது, அவ்வழியாக வந்த விரைவு ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

advertisement by google

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button