இந்தியாகல்விதமிழகம்பக்தி

கிறுத்துவர் தமிழரா? தமிழுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு?என்று தாங்கள் கேட்பவர்களுக்கான இந்த பதிவு✍️மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த வீரமாமுனிவர், இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார், வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு, தமிழ்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்✍️ காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா திருத்தலத்தில், வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு✍️விண்மீன் நியூஸ் 2017 ஆம்ஆண்டு வெளியீட்ட செய்தி ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கிறுத்துவர் தமிழரா?
தமிழுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு?

advertisement by google

என்று தாங்கள் கேட்பவர்களுக்கான இந்த பதிவு.

advertisement by google

இலங்கை படையினர் இந்திய [தமிழக] மீனவனை சுட்டு கொன்று விட்டானே என்று நாம் முகநூல் வாயிலாக கோபம் கொப்பளிக்க பதிவிட்டு கொண்டு இருக்கும் நேரத்தில்

advertisement by google

அப்பதிவு வந்தது.

advertisement by google

குண்டடிபட்டு இறந்தவர் ஒரு கிறிஸ்துவர் ஏண்டா தமிழனை சுட்டான் என்று கதறுகிறீர்கள் என்று அப்பதிவு பகிரப்பட்டது …

advertisement by google

இத்தாலி நாட்டில் பிறந்த Constantine Joseph Beschi என்பவர்

advertisement by google

கிருஸ்துவ மதத்தை பரப்ப இத்தாலியில் இருந்து புறப்படுகிறார் சில நாடுகளை கடந்து 1710 ம் ஆண்டு இந்தியா வந்தடைகிறார்

advertisement by google

இந்தியாவில் கோவாவில் வந்து இறங்கிய இவர் அப்படியே கொச்சி வந்து கால்நடையாக மதுரைக்கு வருகிறார்

மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த இவர் இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார் வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு இம்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்..

இவர் ஆய்வு செய்த மொழி தமிழ் …

தமிழின் உச்சரிப்பு அழகை கண்ட இவர் தமிழை கற்றுக்கொள்கிறார்
மற்றும் தமிழ் இலக்கியம் இலக்கணம் அகராதி போன்றவைகளையும் கற்றுக்கொள்கிறார் ….

இதன் பின்னர் தனக்கு ஆங்கிலப்பெயர் வேண்டாம் என்று தைரியநாதசாமி என்று மாற்றிக்கொண்டார்

இவர் தமிழ் எழுத்தின் சிறப்பை மற்ற நாட்டவர்கள் உணர திருக்குறள், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.

தமது நாட்டவர்களான இத்தாலி மக்கள் தமிழை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் – லத்தீன் அகராதியை முதன் முதலில் உருவாக்கினார்.

அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது …

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்….

அதன் பிறகு தொண்ணூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார் அதில்எ ழுத்ததிகாரம் ,சொல்லதிகாரம் ,பொருளதிகாரம் ,யாப்பதிகாரம்
அணியதிகாரம்,,

என்று 5 வகை படுத்தி எழுதியது இவரது சாதனை

மற்றும் புராண தமிழ் இலக்கிய இலக்கணங்கள் எல்லாமும்

கவிதை வடிவில் இருந்து வந்தது..

இதற்க்கு காரணம் அன்றைய காலத்தில் அறிவு புலமை மக்களுக்கு அதிகம் ஆகவே கவிதையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழ்ந்தார்கள்

இன்றைய காலத்தில் திருக்குறளுக்கு விளக்கம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையை உணர்ந்த இவர்

அவற்றை மக்கள் இலகுவாக படிப்பதற்கு தமிழ் இலக்கியங்களை உரைநடையாக மாற்றினார் ..

இதெல்லாம் விட இவர் செய்த மிகப்பெரிய விஷயம்
என்ன தெரியுமா ?

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.

புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று “ர” சேர்த்தேழுதுவது வழக்கம்.

உதாரணத்திற்கு “ஆ” என எழுத “அர” என 2 எழுத்துக்கள் எழுதுவார்கள் (அ:அர, எ:எர)

உதாரணத்திற்கு ஆடு என்று இப்படித்தான் நாம் இன்று எழுதுகிறோம் ஆனால் அக்காலத்தில் ஆடு என்று எழுதுவதற்கு
அர,, டு என்றுதான் எழுதுவார்கள் இதை மாற்றி

ஆடு என்று நெடில் உரையை கொடுத்தவர் இவர் தான்

அதனால் தான் இன்றும் கூட நமக்கு எழுத்து சுருங்கி வருகிறது இல்லையென்றால் நெடில் உள்ள வார்த்தைக்கு இரண்டு தனி தனி வார்த்தைகளை நாம் எழுதவேண்டும் ..

இந்த நிலையை மாற்றி “ஆ, ஏ” என மாறுதல் செய்தவர் இவர்.

இப்போ சொல்லுங்க இந்த கிருத்துவர் செய்த செயலை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா?

ஆமாம் மேலே சொன்ன அந்த இத்தாலி நாட்டு காரர் தமிழுக்கு இவ்வளவு பணிகள் செய்துள்ள பொழுது இவரை பற்றி நமக்கு சொல்லி கொடுக்காதது ஏன் என்று நமக்கு சந்தேகம் எழலாம் .

ஆனால் நமக்கு இவரை பற்றி சொல்லி கொடுத்துளார்கள்

ஆம் …

இவர்தான் நாம் வரலாற்றில் படிக்க கூடிய

வீரமாமுனிவர்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button