இந்தியா

காலைவிரிவான செய்திகள்(25.9.2019)Flash பி. எஸ்.என்.எல் ஊழியர்கள் கதறல்

advertisement by google

????விண்மீண்நியூஸ்????மோடி நிறுவனத்தை மட்டும் மூடிடாதீங்க.. கதறும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்!

advertisement by google

?மிகுந்த கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை, தனியார் மயமாக்கவோ அல்லது மூடவோ கூடாது என்று அதன் ஊழியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

advertisement by google

?ஊழியர்களுக்கு கூட சரிவர சம்பளம் கொடுக்க முடியாமல், செயல்பாட்டு மூலதனமும் இல்லாமல், மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாமல் பல இணைப்பகங்கள் இருளில் மூழ்கிக் கிடப்பதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி வந்தன.

advertisement by google

?இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படலாம் இல்லையேல் மூடப்படலாம் என்றும் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

advertisement by google

?ஆனால் தற்போது மோசமான நிதிப்பிரச்சனையில் உள்ள இந்த நிறுவனத்தினை மூட போவதாக பேசப்பட்டு வருவதாகவும், ஆக இந்த பொதுத்துறை நிறுவனத்தினை மூடக் கூடாது என்றும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

?மேலும் மோசமான நிதி நிலைமையில் உள்ள இந்த நிறுவனத்தினை புதுபிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

?சிக்கலான சூழ்நிலைகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆற்றிய பங்கை வலியுறுத்தி ஊழியர்கள், அரசாங்கத்திடம் நிவாரணம் கோரியுள்ளதோடு, ஜம்மு காஷ்மீரின் சமீபத்திய பிரச்சனைகளின் போது, காஷ்மீரில் அரசாங்க செயல்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் சேவைகளை வழங்குவதற்காக பி.எஸ்.என்.எல் லேண்டுலைன் மற்றும் மொபைல் சேவையையே பெரிதும் நம்பினர்.

advertisement by google

?அதிலும் நிறுவனம் பெரும் இழப்புகளை சந்தித்த போதிலும், அந்த சேவைகளை தடையின்றி செய்து வந்ததையும் நினைவு கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

?ஏனெனில் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு எந்த ஆப்பரேட்டருக்கும் இந்த சேவைகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், இந்த நிலையிலேயே பி.எஸ்.என்.எல் நாட்டின் தொலைதூர பகுதிகளில், தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.

?மேலும் நாடு முழுவதும் 17,000 – 18,000 சேவை இணைப்பகங்களை வழங்கி வருகிறது என்றும், இதனால் இந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 3,000 – 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது என்றும், இவ்வாறு சேவை வழங்கப்படாவிட்டால் இந்த கிராமங்கள் எல்லாம் துண்டிக்கப்பட்டு விடும் என்றும் கூறியுள்ளது.

?பி.எஸ்.என்.எல் இழப்புக்கு முக்கிய காரணம் அதன் பணியாளர் செலவு என்று நிர்வாகமும் மற்றும் ஊடகமும் தவறான கருத்தை உருவாக்கியுள்ளனர்.

?ஆனால் இது உண்மை இல்லை. இதனால் வேதனை அடைந்த ஊழியர்கள், பி.எஸ்.என்.எல் பலருக்கு நேரடியாக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

?இதன் பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை அதன் சொந்த ஊழியர்களை வைத்தே செய்து வருகின்றது என்றும், ஆனால் மற்ற நிறுவனங்கள் தங்களது சேவைக்காக பெரும்பகுதியை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

♦Friends Social Media
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிப்பட்டினத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு அனுமதி பெறாமல் தோட்டத்தில் மின்வேலி அமைத்ததில் மின்கம்பத்தில் மன்னார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வழக்கு தொடர்பாக 7 ஆண்டுகளுக்கு பிறகு சிபிசிஐடி காவல்துறையினர் பாலகுருநாதன்,பாப்பா ஆகிய இருவரை கைது செய்தனர்
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??????பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறும் மாமல்லபுரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறும் மாமல்லபுரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு வருகின்ற அக்டோபர் 11, 12, 13 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

SRI??செய்திகுழுமம்
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ⚫⚫⚫திருவாரூர் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவாரூர் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த வெங்கடேஷ்(12), விக்னேஷ்(10) ஆகிய சிறுவர்கள்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

??செய்திகுழுமம்
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நாளை சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

ஆனைமலையாறு திட்டம், நல்லாறு திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கேரள முதல்வரிடம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பேசவுள்ளார். – துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் 2016 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் முத்துராமலிங்கம் என்ற ஜோசப் (48) வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியான ராமர் பாண்டி என்ற ராமர் (40)கைது செய்யப்பட்டுள்ளார்

இக்கொலைவழக்கில் தொடர்புடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சோ.மாரியப்பன் உள்பட மூவர் தலை மறைவாகியுள்ளனர். தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் – நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பேட்டி
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். புதிதாக சுகாதார மையங்கள் அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

– டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி மாணவர்கள் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி மாணவர்கள் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மாணவர்கள் சென்ற பைக் மீது ஆட்டோ மோதியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுனரை தாக்கினர். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??சென்னை அம்பத்தூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை அம்பத்தூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி மகாலட்சுமி நேற்று உயிரிழந்த நிலையில் அம்பத்தூரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: திருநெல்வேலி:

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நபருக்கு 10000 ரூபாய் போலீசார் அபராதம் விதித்ததால் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு சாவு திருநெல்வேலியில் பரபரப்பு போலீசார் விசாரணை.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??சட்ட விரோதமாக கேபிள் டிவி இணைப்பு புகார்: மனுவை பரிசீலிக்க மத்திய தகவல்தொடர்பு செயலருக்கு மதுரை கிளை உத்தரவு

மதுரை: சட்ட விரோதமாக கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மத்திய தகவல்தொடர்பு செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: இன்று (24.09.2019) புதுதில்லியில் மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் அவர்களை மாண்புமிகு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது குறித்து கோரிக்கை மனுவினை அளித்தார்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??திருவள்ளூர் அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி என புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து ரூ.3 கோடி மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??சென்னையில் செ.29ம் தேதி மகளிர் தொழில் முனைவோருக்கு நிதிமேலாண்மை குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி

சென்னை: மகளிர் தொழில் முனைவோருக்கு நிதிமேலாண்மை குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி செப்டம்பர் 29ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம், ஈக்காட்டுத்தாங்கலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 32 ஆயிரம் கன அடியாக உயர்வு

தர்மபுரி: தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்பொழுது 32 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??தஞ்சை கூத்தனுரில் திருக்கோடீஸ்வர சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மனு: பதிலளிக்க உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை கூத்தனுரில் திருக்கோடீஸ்வர சுவாமி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை நடத்துவதாக வழக்கு நிலுவையில் உள்ளது. கோவில் செயல் அலுவலர் மனுவுக்கு தஞ்சை கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??மாம்பழம் திருடியவரை நாடு கடத்த கோர்ட் உத்தரவு

துபாய்: துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்தியாவை சேர்ந்த ஊழியருக்கு ரூ. 96,600 அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல் அவரை நாடு கடத்துமாறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??கோடிகளை நன்கொடையாக தந்த திமுக: மக்களவை தேர்தல் செலவினங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது…..

புதுடில்லி: மக்களவைத் தேர்தலின் போது திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு ரூ. 25 கோடி நன்கொடை வழங்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் செலவிற்காக நன்கொடை வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா 2 இரண்டு இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
தேர்தலுக்காக கட்சிகள் செய்த செலவினங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த ஆக., 27ல் திமுக சார்பில் மக்களவை தேர்தல் செலவினங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 10 மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் அக்கட்சியின் செலவினம் சுமார் ரூ. 7.2 கோடி எனக் கூறியிருந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதுவரை தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: தேர்தல் செலவுக்காக நாங்கள் மாநில முழுவதும் நன்கொடை பெற்றோம். அதற்கான செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளோம். இது வெளிப்படையான முறையில் செய்யப்படுகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
தேர்தலுக்கு முன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் திமுக கொடுத்த நன்கொடை குறித்து தெரிவிக்காதது குறித்து கூறுகையில், மாநில பிரிவின் மூலம் பெறப்பட்ட விவரங்களை மத்திய குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அடுத்த பிரமாண பத்திரத்தில் அது குறித்து தாக்கல் செய்யப்படும், எனக் கூறினார்.

இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், நாங்கள் பெற்ற பணம் ஊழல் பணமல்ல. தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் உதவினர், எனக் கூறினார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்தமுறை திமுக அதை தேர்தல் செலவினங்களில் சேர்த்துள்ளது, எனக் குறிப்பிட்டார்.

திமுகவின் தேர்தல் செலவுகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ. 58.94 லட்சமும், ஊடகங்கள் வாயிலான பிரசாரத்திற்கு ரூ. 15.46 கோடியும் செலவாக காட்டியுள்ளது. மேலும், லோக்சபா வேட்பாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் செலவு செய்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை சரிவு -ஆய்வறிக்கையில் தகவல்

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??வெங்காயம் கிலோ ரூ.22 -அலைமோதும் கூட்டம்

ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் டெல்லியில் விற்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??வேலூர் அருகே நுகர்பொருள் வாணிய கழக கிடங்கில் இருந்து ரூ.56,600 பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் மேல்நேத்தப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிய கழக கிடங்கில் இருந்து ரூ.56,600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாணிப கழக கிடங்கு பொறுப்பாளர் அறிவழகனிடம் இருந்து பணத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ??தடுப்பூசி ஹீரோ விருது – ஷேக் ஹசினாவுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டது…

வங்காளதேசத்தில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு ‘தடுப்பூசி ஹீரோ’ விருது அளிக்கப்பட்டது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை தமிழக அரசு சார்பில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு D.ஜெயக்குமார் அவர்களும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு P. பெஞ்சமின் அவர்களும் வரவேற்றார்கள்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவையில் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 445 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவின் பேரில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக கலப்பட டீத்தூள் தொடர்பாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது
இந்நிலையில், நேற்று போத்தனூர் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் காமராஜ் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், அப்பகுதியில் இருந்த டீ கடைக்கு டீத்தூள் விற்பனை செய்து வந்தார்.
அதைப் பார்த்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டீத்தூள் பாக்கெட்டில் முறையான பதிவுகள் ஏதும் குறிப்பிடாததை கண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அது கலப்பட டீத்தூள் என தெரியவந்தது.
உடனடியாக அவர் கையில் இருந்த சுமார் 12 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கொடுத்தனர்
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையையடுத்து டீ தூள் விற்பனை செய்தவரின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் அவரின் வீட்டில் இருந்த 445 கிலோ அளவிலான கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
மேலும் இந்த டீ தூள் விற்பனை செய்த நபர் கணபதி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன்(45) என தெரியவந்தது. இவர், டீ நிறம் அதிகமாக இருக்க கலர் கலந்து, வீட்டிலேயே டீத்தூளை தயாரித்து போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட டீத்தூளை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅2019 ஆம்‌ ஆண்டில்‌ தீபாவளி பண்டிகை எதிர்வரும்‌ அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில்‌, கோவை மாவட்டத்தின்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசுக்கடைகள்‌ நடத்திட விருப்பம்‌ உள்ளவர்கள்‌, வெடிபொருள்‌ சட்டவிதிகள்‌ 2008-ன்‌ கீழ்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலரிடம்‌ தற்காலிகப்‌ பட்டாசு உரிமம்‌ தமிழ்நாடு அரசு உத்தரவின்‌ படி நடப்பு ஆண்டு முதல்‌ ஒற்றை சாளரமுறையில்‌ (Single Window System) பெற்றிட வேண்டும்‌, என்பதன்‌ அடிப்படையில்‌ இணையவழியாக விண்ணப்பங்கள்‌ கடந்த ஆகஸ்ட் 31 வரை பெறப்பட்டது
வணிகர்களின்‌ கோரிக்கையை தொடர்ந்து கூடுதல்‌ முதன்மை செயலாளர்‌ / வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ அவர்களின்‌ உத்தரவின்‌ படி மேற்படி உரிமத்தினைப்‌ பெறுவதற்கென தங்களது விண்ணப்பத்தினை செப்டம்பர் 28-ஆம்‌ தேதி வரை இ-சேவை மையங்கள்‌ மூலம்‌ கீழ்கண்ட ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

  1. தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம்‌ கோரும்‌ புலம்‌ 9 ச.மீ முதல்‌ 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும்‌, புலத்தினை குறிக்கும்‌ புலவரைபடத்தில்‌ சாலை வசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும்‌ கடையின்‌ கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டூக்காட்டூம்‌ (Sub rule-3) புலவரைபடம்‌.
  2. உரிமம்‌ கோரும்‌ இடத்தின்‌ உரிமையாளர்‌ மனுதாரராக இருப்பின்‌, அதற்கான ஆவணங்கள்‌ மற்றும்‌ நடப்புநிதி ஆண்டில்‌ வீட்டுவரி செலுத்திய இரசீது நகல்‌.
  3. வாடகைக்‌ கட்டிடம்‌ எனில்‌, உரிமையாளர்‌ வீட்டுவரி செலுத்திய அசல்‌ இரசீது நகலுடன்‌, கட்டிட உரிமையாளரிடம்‌ ரூ.20/-க்கான முத்திரைத்தாளில்‌ பெறப்பட்ட அசல்‌ சம்மதக்‌ கடிதம்‌.
  4. உரிய தலைப்பின்‌ கீழ்‌ அரசுக்‌ கணக்கில்‌ உரிமக்‌ கட்டணம்‌ ரூ.500/- அசல்‌ செலுத்துச்‌ சீட்டு.
  5. மனுதாரரின்‌ மார்பளவு பாஸ்போர்ட்‌ அளவுள்ள வண்ண புகைப்படங்கள்‌ சமர்ப்பிக்க வேண்டும்.
  6. மனுதாரரின்‌ அசல்‌ நிரந்தர கணக்கு எண்‌ (Pan Card), ஆதார்‌ கார்டு, குடும்ப அட்டை / ஸ்மார்ட்‌ கார்டு.

தற்காலிகப்‌ பட்டாசு உரிமம்‌ பெற மாண்பமை உயர்நீதிமன்ற – தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்‌ :

1) பட்டாசு கடைகளில்‌ மேல்மாடியில்‌ குடியிருப்பு மற்றும்‌ பட்டாசு இருப்பு இருத்தல்‌ கூடாது.

2) பட்டாசு கடையின்‌ அருகில்‌ மருத்துவமனைகள்‌, பள்ளிகள்‌, வழிபாட்டூத்தலங்கள்‌, திருமண மண்டபங்கள்‌ எளிதில்‌ தீப்பற்றும்‌ பொருட்கள்‌ உள்ள பகுதிகள்‌/கட்டிடங்கள்‌ இருத்தல்‌ கூடாது.

3) பொதுமக்கள்‌ கூடும்‌ பகுதிகள்‌, “பேருந்து நிறுத்தம்‌, கக நிலையங்கள்‌ அருகில்‌ பட்டாசு கடை அமைத்தல்‌ கூடாது.

4) பட்டாசுகடையின்‌ கட்டிடத்தில்‌ கண்டிப்பாக இரண்டூ வழிகள்‌ இருக்க வேண்டும்‌. அதில்‌ அவசரக்காலவழி கடையின்‌ வெளிச்செல்லும்படி இருத்தல்‌ வேண்டும்‌.

5) கட்டிடம்‌ தார்சு வகை (R.c.Roofing) மேல்கூரையாக அமைந்திருதீதால்‌ சுற்றளவில்‌ 15 மீட்டருக்கு அதே வகை பட்டாசு கடை இருக்க கூடாது.

6) கட்டிடத்தின்‌ பரப்பளவு Explosive Rule 2008ன்‌ விதியில்‌ தெரிவித்துள்ளபடி அதன்‌ அளவிற்கு உட்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌ (9 sq.mt. to 25sq.mt).

7)காலிஇடத்தில்‌ தற்காலிக பட்டாசு கடை அமைக்கும்‌ போது 50 மீட்டார்‌ சுற்றளவுக்கு காலியிடம்‌ இருக்க வேண்டும்‌. இரண்டு வழிகள்‌ கட்டாயம்‌ அமைக்கப்பட வேண்டும்‌.

8) பட்டாசு கடை வைக்க கோருமிடத்திற்கு கதவு எண்ணுடன்‌ கூடிய விலாசம்‌ விண்ணப்பத்தில்‌ கட்டாயம்‌ குறிப்பிடப்பட வேண்டும்‌.

9) திருமண மண்டபங்கள்‌, அரங்கங்கள்‌, சமுதாய கூடங்கள்‌ ஆகிய கட்டிடங்களில்‌ பட்டாசு கடை அமைக்க கூடாது
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து விண்ணப்பம்‌ செய்யுமாறு விண்ணப்பதாரா்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.
மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப்‌ பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்களும்‌, நிபந்தனைகள்‌ கடைபிடிக்காத விண்ணப்பங்களும்‌ நிர்வாக காரணங்களினால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது என இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.
இக்கால நீட்டிப்பினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு வணிகர்கள்‌/விற்பனையாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றனர்‌, இப்படிக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
[9/25, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலியின் ஐந்து வயது மகள் ரம்ஜான் பாத்திமா கடந்த 18ம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 19ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலை மோசமாகிய நிலையில் கடந்த 23ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று ( செப்டம்பர் 24, அதிகாலை ஒரு மணியளவில் சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்
இதையடுத்து, சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.
கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருவதையடுத்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலின் தாக்கங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது
இந்த காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் காய்ச்சலினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்கள் ஏதும் வெளியில் வருவதில்லை எனவும் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரிக்கபதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இப்படி முறையான புள்ளிவிபரங்கள் பதியப்படாததால் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.
அதேபோல டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நடைபெறும் மரணங்களும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தாததால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button