இந்தியா

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு✍️ தெலுங்கு செய்தி சேனல் ஏபிஎன் ஆந்திர ஜோதி குறித்த நேரடி விவாதத்தின் போது சம்பவம்✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு..

advertisement by google

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது பாஜக தலைவர் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. தெலுங்கு செய்தி சேனல் ஏபிஎன் ஆந்திர ஜோதி குறித்த நேரடி விவாதத்தின் போது பாஜக தலைவரை அவதூறாக பேசியது. குழு உறுப்பினர்களில் ஒருவர் பாஜக ஆந்திர மாநில பொதுச் செயலாளர் எஸ் விஷ்ணுவர்தனை அவமதித்தார்.

advertisement by google

அமராவதி திட்டங்களுக்கு ரூ .3,000 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசு உத்தரவாதத்தை ஒத்தி வைப்பது குறித்து ஆந்திர அரசு எடுத்த முடிவு குறித்து இந்த விவாதம் நடைபெற்றது.

advertisement by google

அப்போது பேசிய பாஜக தலைவர் விஷ்ணுவர்தன் முன்னாள் முதலமைச்சர்கள் இவ்விவகாரத்தில் வீணில் விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, அமராவதி பாதுகாப்புக் குழு கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதி கோலிகாபுடி சீனிவாச ராவ் விஷ்ணுவர்தன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது விஷ்ணுவர்தன் ஸ்ரீனிவாச ராவ் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதாக குற்றம் சாட்டினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது.

advertisement by google

வாக்குவாதம் அதிகரித்தபோது, ​​சீனிவாச ராவ் தனது செருப்பை பாஜக தலைவர் விஷ்ணுவர்தன் மீது வீசினார். இதனை அடுத்து விஷ்ணுவர்தன் தனது இருக்கையிலிருந்து எழுந்து ராவ் நோக்கி வந்தார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட கிருஷ்ணா ஸ்டுடியோவில் நடந்த அசம்பாவித சம்பவங்களுக்கு பார்வையாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button