வரலாறு

கறுப்புத் தங்கம்?அண்டங்காக்காய், தடித்ததோல்காரர்… என வெறுப்போடு தம் எதிரிகளால் அழைக்கப்பட்டவர்? ஆறடி உயரம் !அஜானுபாகுவான தோற்றம்!.. கறுப்புதேகம் கொண்ட தேசீய தலைவர் – காமராஜர் ஓர் சகாப்தம்?முழுவரலாற்று தொகுப்பு -விண்மீன்நியூஸ்

advertisement by google

கறுப்புத் தங்கம்!

advertisement by google

அண்டங்காக்காய்!… என வெறுப்போடு தம் எதிரிகளால் அழைக்கப்பட்டவர்!…
ஆறடி உயரம் !அஜானுபாகுவான தோற்றம்!.. கறுப்பு தேகம் கொண்ட தேசியத்தலைவர்!.

advertisement by google

“கறுப்பு தென்னாட்டு காந்தி” என்று பெருமைபட பேசப்பட்டவர்!கிங்மேக்கராய் திகழ்ந்தவர்!…

advertisement by google

இந்தியப் பிரதமர் பதவியையே வேண்டாம் எனத் தவிர்த்தவர்!!!!
தமிழக காங்கிரஸ் தலைவராய்த் திகழ்ந்தவர்! …
.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினராய் பதவி வகித்தவர்!.
தமிழகத்தின் ஒன்பது வருடகாலம் முதல்மைச்சராய் பொற்கால ஆட்சியைத் தந்தவர் !

advertisement by google

அவரது ஆட்சிகாலம் போல் இன்றுவரை அமையவில்லையே!!, என இன்றளவும் எல்லோராலும் ஏக்கம் கொள்ள வைத்தவர்!…
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இளவயதில் பங்கேற்று, சிறை சென்றவர்!..

advertisement by google

இராஜதந்திரி இராஜாஜியின் , குலக்கல்வி திட்டத்தை முறியடித்தவர்!..
அவரே !!!!நம் மண்ணின் மைந்தன் !கருமவீரர் !,பாரத் ரத்னா !குமாரசாமி காமராஜர்!!!!

advertisement by google

அனைவருக்கும், இலவசக் கல்வி திட்டம் !…..
ஏழைக் குழந்தை பசி போக்க பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம்! …

advertisement by google

பள்ளிக்குழந்தைகளின் ஏற்றத்தாழ்வு களைய சீருடைத் திட்டம்!
பாசனத்திற்காக அணைகள் கட்டி விவசாயம் காக்கும் திட்ட்ம்!

என, எண்ணற்ற நல்ல பல திட்டங்களைத் தீட்டி ந்டைமுறைப்படுத்தி அழகு பார்த்தவர்!
ஏழைகளுக்காகவே வாழ்ந்து ஏழையாகவே மறைந்த மக்கள் தலைவர்!!

அப்படிக்காத மேதையை! காழ்ப்புணர்ச்சியால் சிலர் டெல்லியில் உள்ள அவரில்லத்திற்கு தீ வைத்துக் கொல்லப் பார்த்தனர்!
தர்மம் தலைகாக்கும் எனும் சொலுக்கேற்ப்ப!.., ஏழைகளின் தலைவன், பீனிக்ஸ் பறவையாய் ! வெளிவந்தார்..!…

மூடநம்பிக்கைகளைச் சாடி பகுத்தறிவாளனாய் வாழ்ந்துக் காட்டியவர் !
மனிதநேயர் காமராஜர்!தமிழ் மண்ணின் மைந்தன் காமராஜர்.

இவரல்லவோ தலைவர்

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா? என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.

காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்துச் சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றைப் பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்துக் கொடுத்து விட்டுச் சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.

சிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்குப் பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்தக் குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

காமராஜர் – ஓர் சகாப்தம்

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில் போட்டுக் கொள்வார் காமராசர்.
சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.

ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல் நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.
“சாகும் போது கடன்காரனாக சாக விரும்பவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத் தான் அழைத்தேன்” என்றார் பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப் போனது.

‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.
இந்த பணத்திற்காகத் தான் வரச் சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .
சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார். அதெல்லாம் எனக்குத் தெரியாது என்றார் காமராஜர்.

வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதி வாரியாக எழுதி வைத்திருந்ததைக் காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பைப் போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒரு முறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிக் கொடுங்கள்’ என்றார்.

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்தக் கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தைப் பேசி முடித்தார்.
பத்திரப்பதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார்.

யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில் தான் என்ற பதிலைக் கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்தக் காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அந்த இடம் தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘.

கோடிகோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்தப் பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை.

கிண்டியில் பொது இடத்தில், பொதுச்சொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

கர்ம வீரர் காமராஜரின் சாதனை எத்தனை பேருக்கு தெரியும்?

யார் சிறந்தமனிதர்? எது 100 ஆண்டு பேசும் சாதனை?

காமராசரின் ஆட்சிக் காலம்:

ராஜாஜி நிதிப் பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அது தான் அவர் முதன் முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக்கார மாநிலமாக
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டு வந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை.

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக் கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்ற போது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி… என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே…!

காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்…
இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..?

இல்லை
“இலவச”த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?

பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினம் இன்று =அக்-2

இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத அடுத்தடுத்த தலைமுறையும் இங்கு வந்து விட்டது. இந்நிலையில் ஒரு அரசியல்வாதியின் இலக்கணமாக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கடைசி நாள் சம்பவங்களின் தொகுப்பு.

1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 06,30 மணிக்கு காமராஜர் எழுந்தார். காலைப் பத்திரிக்கைகள் அனைத்தும் அவரிடம் கொடுக்கப்பட்டன. எல்லாப் பத்திரிக்கைகளையும் படித்தார். பின்னர் குளித்து விட்டு வந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.

10 மணிக்கு காமராஜரை தினந்தோறும கவனிக்கும் டாக்டர் வந்து உடல் நிலையைப் பார்த்து இன்சுலின் ஊசி போட்டு விட்டுச் சென்றார்.

11 மணியளவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் காமராஜர் வீட்டிற்கு வந்தனர், அவரைப் பார்க்க விரும்புவதாக கூறினார்கள். உடல்நலமின்றி இருந்த காமராஜரின் அறைக்குள் அவர்கள் அனைவரும் நுழைந்தனர். இந்த சிறிய அறைக்குள் இத்தனைப் பேருக்கும் இடமில்லையே என்று காமராஜர் கூறியபடியே அறைக்குள் நுழைந்தார்.
அவரை கைத்தாங்கலாக வெங்கட்ராமன் அழைத்து வந்தார். அவரைப் பார்த்ததும் மாணவர்கள் காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டனர். மூன்று நிமிடம் அவர்களுடன் உரையாடிய காமராஜர் நிற்க முடியாமல் அவர்களிடம் விடைப் பெற்றுச் சென்றார்.

காங்கிரஸ் செயலாளர்களுக்கு 12 மணிக்கு போன் செய்து அவர்களை வந்து சந்திக்கும்படி அழைத்தார். பின்னர் சிதம்பரம் நகர காங்கிரஸ் இணைச்செயலாளரும், பத்திரிக்கை நிருபருமான தணிக்கை தம்பி காமராஜரை சந்தித்து உரையாடினார்.
வழக்கமாக 1 மணிக்கு உணவருந்தும் காமராஜர் அன்று 01.30 மணிக்கு சாப்பிட்டார். பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்பு துவையல், மோர் சாதம் ஆகியவற்றை காமராஜரின் உதவியாளர் வைரவன் பறிமாறினார்.உணவு அருந்தும் போது மின்விசிறி ஓடிய போதும் வியர்ப்பதாக கூறினார். வைரவன் அதெல்லாம் ஒன்றுமில்லை, பிரமை என்று கூறி காமராஜருடைய உடம்பைத் துடைத்து விட்டார்.

சாப்பிட்ட பிறகு பாத்ரூம் சென்று விட்டு தன்னுடைய படுக்கை அறைக்குச் சென்றார். அவர் மணியடித்தால் தான் உதவியாளர் உள்ளே நுழைவது வழக்கம். இரண்டு மணிக்கு காமராஜர் மணியடித்தார். வைரவன் உள்ளே சென்று பார்த்தால் காமராஜருக்கு உடம்பெல்லாம் வியர்வையாக இருந்தது.

ஆனால் அந்த ரூம் A/C செய்யப்பட்டிருந்த ரூம். பயந்து போன வைரவன் காமராஜரின் தலையை தொட்டுப் பார்த்தார். ஜில்லென்று இருந்தது. உடனே அவர் டாக்டரை கூப்பிடட்டுமா என்று காமராஜரிடம் கேட்டார்.

டாக்டர் செளரிராஜனுக்கு போன் செய்து தரும்படி காமராஜர் கேட்டார் உடனே பல இடங்களில் தேடிப்பார்த்து அவர் எங்கிருக்கறார் என்று தெரியாததால் மற்றொரு டாக்டரான ஜெயராமனைப் போனில் பிடித்த வைரவன் காமராஜரை டாக்டரிடம் பேச வைத்தார்.

காமராஜர் டாக்டரிடம் A/C ஓடிக்கொண்டிருக்கிறது, ஆனால் வேர்க்கிறதே என்று கேட்டார். டாக்டர் மூச்சு திணறுகிறதா, மார்பில் வலியிருக்கிறதா என்று காமராஜரிடம் கேட்டு விட்டு உடனே புறப்பட்டு வருவதாகக் கூறினார்.

டாக்டரிடம் பேசி முடித்த பிறகு வைரவனை அழைத்த காமராஜர் வரும் போது ரத்த அழுத்தம் பார்க்கிற கருவியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு, டாக்டர் வந்தவுடன் எழுப்பு, விளக்கை அணைத்து விட்டுப் போ என்று கூறினார். உதவியாளரும் விளக்கை அணைத்து விட்டுச் சென்றார்.

மூன்று மணியளவில் முதலில் காமராஜர் அவர்கள் தேடிய டாக்டர் செளரிராஜன் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்குள் ஓடி வந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்.

கட்டிலின் இடதுபுறம் திரும்பிக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு கால்களை மடக்கியவாறு காமராஜர் அவர்கள் படுத்திருந்தார்.

ஆனால் காமராஜரிடம் இருந்து வழக்கமாக வரும் குறட்டை ஒலி வராததைக் கண்ட டாக்டர் பயந்து போய் காமராஜரைத் தோளைத் தொட்டு எழுப்பினார். பதில் எதுவும் இல்லை.

நாடித்துடிப்பை பார்க்கலாம் என்று கையைத் தொட்டார். ஜில்லென்று இருந்தது. கையில் இருந்த ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதஸ்கோப்பையும் தரையில் அடித்து, அழுது புரண்டார்.

அதற்குள் வந்த டாக்டர் ஜெயராமன் நிலைமையைப் பார்த்து நேரிடையாக இதயத்திற்குள் ஊசி மருந்தை செலுத்த முயன்றார். பயனில்லை.

அடுத்ததாக டாக்டர் அண்ணாமலையும் அங்கு வந்தார். அவரும் முயற்சித்துப் பார்த்து விட்டு வெளியில் வந்து அதிகாரப்பூர்வமாக காமராஜர் இறந்து விட்டதை அறிவித்தார்.

அப்போது மணி 03.20.

காந்தியத்தின் கடைசித் தூண் சாய்ந்தது.

இந்தியாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு
மதிய உணவுத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்த,
பிரதமர் பதவியில் தான் அமராமல் இந்திரா காந்தியை அமர வைத்த, வாடகை வீட்டில் குடியிருந்து இறக்கும்
போது நான்குவேட்டி சட்டையும், சுமார் 350 ரூபாய் மட்டுமே வைத்திருந்த கறை படாத கரத்துக்குச் சொந்தக்காரர்,
முன்னாள் தமிழக முதல்வர்
“பாரத ரத்னா”
பெருந்தலைவர்
காமராஜர்
நினைவு தினம் இன்று
( 02 அக்டோபர் 1975 )

இணைப்பில் சென்னையில் தி.நகர், திருமலைபிள்ளை சாலையில், பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இல்லமான “பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம்” மற்றும் சென்னை கிண்டியில் உள்ள “பெருந்தலைவர் காமராஜர் நினைவகம்”.

மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியை விடத் தேசப்பணியும் கட்சிப் பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப் பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார்.

பெருந்தலைவர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டுமக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில்வளத்துக்கு முன்னுரிமையளித்து பலதிட்டங்களை நிறைவேற்றினார். இவரது ஆட்சியின் கீழ் 09 முக்கிய நீர்பாசனத் திட்டங்களுக்கான அணைகளை கட்டினார். அவை கீழ்பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டாவடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக பெருந்தலைவரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

பெருந்தலைவரால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட சில முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத மிகுமின் நிறுவனம்
நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக்கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
மற்றும் எண்ணிலடங்கா திட்டங்கள்……..

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button