தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

செப்டிக் டேங்கிற்காக வெட்டபட்டகுழியில் காட்டெருமை,நீலகிரியில்பரபரப்பு

advertisement by google

✍?✅நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் காட்டெருமை விழுந்த தகவல் காெடுத்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் வனத்துறையினர் வராததால் காட்டெருமை இறந்தது.

advertisement by google

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அவ்வப்போது நகரப்பகுதிகளில் வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற ஊர் மக்கள் காட்டெருமை ஒன்று குழிக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், ஒரு மணி நேரம் ஆகியும் அங்கு வனத்துறையினர வராததால், அந்த காடெருமை மயங்கியது. அதனால் மீண்டும் வனத்துறையினரை தொடர்பு கொண்ட போது, அந்த பகுதி கட்டபெட்டு வனப்பகுதி எல்லைக்குள் சேரும் என்றும் அவர்களுக்கு அழைக்கும்படி தெரிவித்துள்ளனர்.

advertisement by google

இருவரில் யார் வந்து இந்த காட்டெருமையை காப்பாற்றுவது என்பதில் தாெடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்ததால் வெகுநேரம் உயிருக்கு பாேராடிய காட்டெருமை பரிதாபமாக இறந்தது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button