இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் பாரதி உலா 2020✍️உரத்த சிந்தனை வாசகர் வட்டம், இலக்கிய உலா, இணைந்து நடத்திய பாரதி உலா பைரவா மஹாலில் வைத்து நடைபெற்றது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் பாரதி உலா 2020

advertisement by google

உரத்த சிந்தனை வாசகர் வட்டம் இலக்கிய உலா கோவில்பட்டி இணைந்து நடத்திய பாரதி உலா பைரவா மஹாலில் வைத்து நடைபெற்றது.அபிராமி அசோசியேட்ஸ் மேலாண்மை இயக்குனர் அபிராமி பி.முருகன் தலைமை வகித்தார். உரத்த சிந்தனை வாசகர் வட்டத் தலைவர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். அரிமா டாக்டர் பிரபு அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் சம்யுக்தா, தமிழினி, கிருத்திகா ஆகியோரின் பாரதியார் பற்றிய உரை கவிதை பாடல்களை பாடினர்.ஜெயா ஜனார்த்தனன், பேராசிரியை இராஜபிரியங்கா, செஞ்சொல்லாளர் சரவணச்செல்வன், இலக்கிய குரிசில் ராஜாமணி ஆகியோர் பாரதி உரையாற்றினர்.இணைய வழியில் நடைபெற்ற பாரதியார் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 139 மாணவ மாணவிகளுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன. விநாயகா ரமேஷ், ஆசியா பார்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம், அரிமா டாக்டர்.பிரபு, அரிமா அட்வகேட் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், மருத்துவர் அபிநயாசுரேஷ், அரிமா வெங்கடாசலம், கவிஞர் பார்த்திபன், எழுத்தாளர்கள் இப்ராஹிம், நெல்லை தேவன்,ரமணி முருகேஷ் நாவலாசிரியர் எம்.எம்.தீன், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள், முனைவர் முருக சரஸ்வதி, உமா பிளாஸ் ஸ்டுடியோ பிச்சையா ஆகியோருக்கு பாரதி விருது வழங்கப்பட்டது.

advertisement by google

ஆசிரியர் தங்கதுரையரசி எழுதிய “சொற்களால் நிறமேறும் பொழுதுகள்” என்ற கவிதை நூலை நூலாசிரியர் எம்எம்.தீன் வெளியிட்டார். துரையரசும், இலக்கிய உலா இரவீந்தரும் பெற்றுக்கொண்டனர். அட்வகேட் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், சாத்தூர் எட்வர்டு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் வரகவி முருகேசன் ஆகியோர் நூல் அறிமுக உரையை ஆற்றினார். நூலாசிரியர் கவிதாயினி தங்கதுரையரசி ஏற்புரை வழங்கினார். கவிஞர் பார்த்திபனின் “தாய்க்கு ஒரு தாலாட்டு” என்ற இசைத்தட்டு வெளியிடப்பட்டது.வியூகம் திரைப்பட இயக்குனர் வசந்த் வெளியிட விநாயகா ரமேஷ், இலக்கிய இரவீந்தர்,அரிமா கரு.துரைராஜ் பெற்றுக் கொண்டனர்.பின்னணி பாடகி கல்கி ரமணி, ஜோஸ்வா, ஜெபத்துரை, இசையமைத்த கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்த ஒளி ஓவியம் மணி, ராஜேஷ் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை விநாயகா ரமேஷ் வழங்கினார்.கவிஞர் பார்த்திபன் ஏற்புரையும், நன்றியுரையும் வழங்கினார். நிகழ்ச்சியை முனைவர் முருகசரஸ்வதி,கவிஞர் ஜெரோ பாலாவும் இணைந்து வழங்கினர். திருவள்ளுவர் மன்ற துணைதலைவர் திருமலை முத்துச்சாமி, மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button