இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கழுகுமலையில் ரூ.189 லட்சம் வளர்ச்சிப் பணிகள்✍️அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கழுகுமலையில் ரூ.189 லட்சம் வளர்ச்சிப் பணிகள் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார்.

advertisement by google

கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.189 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

advertisement by google

கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட வார்டு எண்.6 பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக், வடிகால் அமைத்தல், வார்டு எண்.15ல் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக், வடிகால் அமைத்தல், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் மற்றும் குமாரபுரம் காலனி தெருவில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் மூலதன மானிய திட்டம் 2019 – 2020ஆம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் வல்லாரை வென்றான் கண்மாயில் திறந்த வெளி கிணறு அமைத்து, அக்கிணற்றில் இருந்து ஆறுமுக நகர், கழுகாசலமூர்த்தி நகரில் புதிதாக கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, பம்ப் ரூம் மற்றும் கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2020 – 2021ன் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் குமாரபுரத்தில் சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு சாலை வசதி மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, ஊராட்சிக்குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், கயத்தாறு அதிமுக ஒன்றியச் செயலர் வினோபாஜி, கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், உதவி பொறியாளர் அன்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button