அவன் ஒரு ஒசாமா பின்லேடன்தான்..
ஆனால் இப்போது எங்களுக்கு கிருஷ்ணா..வாகவே மாறிவிட்டான்.
அவனை பிரிந்து எங்களால் இருக்கவே முடியவில்லை என்கிறார்கள் ஊர்மக்கள்
அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் ரோங்ஜலி என்ற காட்டுப்பகுதி உள்ளது. இந்த காட்டில் இருந்து ஒரு யானை 2 வாரத்துக்கு முன்பு ஊருக்குள் நுழைந்துவிட்டது.
அந்த யானைக்கு 35 வயது இருக்கும் என்கிறார்கள்.
வந்த யானை சும்மா இல்லை.. தன் அட்டகாசத்தை ஆரம்பித்தது… குடிசைகளை பிய்த்து போட்டது.. மக்களை பயமுறுத்தியது.. 5 பேரை தன் காலால் மிதித்தே கொன்றுவிட்டது
இதனால் யானையை உடனே பிடியுங்கள் என்று வனத்துறையினருக்கு நடுங்கி போன ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். அத்துடன், தங்கள் ஊர் மக்களை கொன்ற அந்த யானைக்கு “ஒசாமா பின் லேடன்” என்று ஒரு பெயரையும் வைத்தார்கள்
புத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக – சிவசேனா கூட்டணி?.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே
இதற்கு பிறகு பின்லேடனை பிடிக்க வனத்துறையினர் தீவிரமானார்கள்.. கும்கி யானை தயார் செய்யப்பட்டது.. நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் பின்லேடனை பிடிக்க தயாரானார்கள்.. அதன்படி, போன 11-ம் தேதி வசமாக சிக்கி கொண்டான் பின்லேடன்! ஆனால் கையில் சிக்கியவுடன் அப்படி ஒரு அமைதி பின்லேடனிடம் காணப்பட்டது.. யாரையும் எதுவுமே செய்யவில்லை.. ரொம்பவும் சாதுவாகி விட்டது.. இதை பார்த்து கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர்.. ஒசாமா பின்லேடன் என பெயர் வைத்த அவர்களே, யானையின் அமைதியை பார்த்து கிருஷ்ணா என்று பெயர் சொல்லி கூப்பிட்டனர்.. இந்த சமயத்தில்தான் யானையை காட்டுக்குள் கொண்டுபோய் விடலாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் யானையை பிடிக்க கோரிக்கை விடுத்த இதே மக்கள், அதனை காட்டுக்குள் கொண்டுபோய் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், யானை உயிரியல் பூங்காவில் யானை கொண்டு செல்லப்பட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வந்தது. கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சோ தெரியவில்ல.. திடீரென்று இன்று காலை உயிரிழந்தது. திடீர் மாரடைப்பு என்று முதல்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்… கிருஷ்ணா எப்படி இறந்தான் என்றே தெரியவில்லை.. இது பற்றி மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஒசாமா பின்லேடனாக இருந்தபோதும் சரி.. கிருஷ்ணாவாக மாறியபோதும் சரி.. அதனை மறக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் ஊர் மக்கள்