இந்தியாதமிழகம்

காணாமல் போன தங்கம்✍️ சிபிஐக்கு எதிரான வழக்கை புலனாய்வு செய்யப்போகும் தமிழக சிபிசிஐடி காவல்துறை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

⭐? காணாமல் போன தங்கம்! சிபிஐக்கு எதிரான வழக்கை புலனாய்வு செய்யப்போகும் தமிழக சிபிசிஐடி காவல்துறை!!? 2012-ம் ஆண்டு சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து அதே தனியார் நிறுவன அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த லாக்கருக்கான 72 சாவிகளை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர். பின்னர் இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது! அதே வேளையில் அந்த நிறுவத்தின் மீது ரூ.1,160 கோடி வங்கிகடன் மோசடி வழக்கு வங்கிகள் சார்பில் பதிவானது! இந்நிலையில் அந்நிறுவத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்!சிபிஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தங்கத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரிய வங்கி சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியத்தின் மனுதீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தது! இதனையடுத்து கடந்த 2-வது மாதம் (பிப்ரவரியில்) தங்கத்தை ஒப்படைக்க 72 லாக்கர்களும் திறக்கப்பட்டன!கைப்பற்றப்பட்ட 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! இதுதொடர்பாக ஐகோர்ட்டில் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்!. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது!

advertisement by google

அப்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கத்தை தனியார் நிறுவனத்தில் உள்ள தராசு மூலம் எடை போட்டனர். அதில் எடை அதிகமாக காட்டியிருக்கலாம். தற்போது வேறு தராசு மூலம் எடை பார்க்கும்போது, வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வக்கீல் சீனிவாசன் வாதிட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். “மாயமானது ஒரு சவரனோ 2 சவரனோ இல்லை. சுமார் 100 கிலோ தங்கம் மாயமாகி உள்ளது. இதை சாதாரணமாக விட முடியாது!

advertisement by google

எனவே, மாயமான 100 கிலோ தங்கம் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்த உத்தரவிட போகிறேன்!. ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகள் புலன்விசாரணையில் முதன்மையானவர்கள், அவர்கள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என்று வாதம் செய்யப்பட்டது. இதை ஏற்க முடியாது, சி.பி.ஐ.க்கு மட்டும் கொம்புகள் உள்ளது. மாநில போலீசாருக்கு வால் மட்டும் உள்ளது என்று கூற முடியாது. மேலும், டெல்லி போலீஸ் சட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே, தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்யவேண்டும். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவரது புலன் விசாரணைக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு !!

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button