இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா – அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடியில் வன்கொடுமை
தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா – அமைச்சர் பங்கேற்பு

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை
தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தினை காணொலி காட்சி மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அம்ரீஸ்வர் பிரதாப்
சாகி திறந்து வைத்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்றார்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியினர்
வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா இன்று (15.10.2020)
நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு வணக்கத்திற்குரிய உயர்நீதிமன்ற
தலைமை நீதியரசர் அம்ரீஸ்வர் பிரதாப் சாகி காணொலி காட்சி
மூலம் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்தார். செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலை
வகித்தார்கள்.

advertisement by google

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர்
செ.ராஜூ பேசியதாவது:

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைக்கு வரலாற்றில் ஒரு மைல்கல் என்று
சொன்னால் அது மிகையாகாது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக
இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு நிர்வாக ரீதீயாக இன்று அத்தனை
அமைப்புகளும் இயங்கி வருகிறது. இன்று
உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அம்ரீஸ்வர் பிரதாப் சாகி நமது
மாவட்டத்தில் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு
சட்ட சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்துள்ளார்கள். நீதி விரைவாக
கிடைப்பதற்கு புதிய துவக்கமாக இன்று துவக்கி வைத்தற்கு மாவட்ட மக்கள்
சார்பில் நான் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

advertisement by google

✍தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறுவார்கள். அந்த
வகையில் நமது நெல்லை மாவட்டத்தில் இருந்து நமக்கு என்று நிர்வாக ரீதியாக
தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு இந்த துறையில் தனித்தனியாக
நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். சட்டரீதியாக குறிப்பாக தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளுக்கு நீதி
விரைவாக கிடைக்க வேண்டும் என்று சொன்னால் தூத்துக்குடி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டமும் ஒன்றாக இருந்த நேரத்தில் பாதிக்கப்பட்வர்கள்
நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகள் நடத்துவதற்கு கால தாமதம் ஏற்பட்டு
வந்தது. இன்றைக்கு புதிய வரலாறாக நமது மாவட்டத்திற்கு என்று தனி
நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதியரசர் குறிப்பாக சென்னை
ஐகோர்ட் தலைமை நீதியரசர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை
தெரிவித்து வாழ்த்து கூறி விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.

advertisement by google

✍தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்
சந்தீப் நந்தூரி, முதன்மை மாவட்ட நீதிபதி என்.லோகேஷ்வரன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சட்டமன்ற
உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன்
(விளாத்திகுளம்), பொறுப்பு நீதிபதி பத்ரிதாசன், தலைமை குறற் வியல்
நீதித்துறை நடுவர் திருமதி.மகேஷ்வரி, தூத்துக்குடி பார் அசோசியேசன் அடாக்
கமிட்டி சேர்மன் A.W.D.திலக் மற்றும் பார் அசோசியேசன் உறுப்பினர்கள்,
அலுவலர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button