இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஊராட்சி மன்ற கூட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை இருக்கையில் அமர விடாமல் தரையில் அமரவைத்த கொடுமை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பல்வேறு தேசிய கட்சிகளில் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் மாநில தலைவராக்கி அழகு பார்க்கும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது வேதனைக்குரியது

advertisement by google

சிதம்பரத்தில் சாதி ஆதிக்கசக்தியின்னர் அட்டூழியம்

advertisement by google

ஊராட்சி கூட்டத்தில் தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த கொடுமை துணை தலைவரின் சாதிய வன்மம்

advertisement by google

சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோர் அவர்கள் இருக்கையில் அமர விடாமல் சாதி
ஆதிக்கசக்தியினர் தரையில் அமர வைத்துள்ளனர் ஊராட்சி செயலாளரின் துணையுடன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மேற்கொண்டு வரும் சாதிய வன்மம் நடவடிக்கை தற்போது அம்பலமாகியுள்ளது அண்மையில் சென்னை அருகாமையில் உள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத்தின் தலைவர் தேசிய கொடியை ஏற்ற விடாமல் அவமதித்தனர் இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட அதிகாரிகள் அந்த சம்பவம் உண்மை என்பதை அறிந்து உடனடியாக கட்சியின் தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைத்தனர் இந்த சம்பவம் வடு மறைவதற்குள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் மீண்டுமொரு சாதிய வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்தவர்கள் 600க்கும் மேற்பட்டோர் மற்ற சமூகத்தினர் உள்ளார்கள் நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சி மன்றம் ஆதிதிராவிடர் சமூக இருக்கும் ஒதுக்கப்பட்டது தேர்தலில் போட்டியிட்டு ராஜேஸ்வரி சரவணகுமார் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்த ஊராட்சி மன்றம் 6 உறுப்பினர்கள் கொண்டது ஒரு உறுப்பினர் மட்டுமே ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்தவர் மற்ற ஐந்து உறுப்பினரும் மற்ற சமூகத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் சாதி ஆதிக்க சக்தி சிந்தனையில் உள்ளதால் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவரை குடியரசுதினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற விடாமல் மாற்று சமூகத்தை சார்ந்த துணை தலைவர் மோகன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள் ளார் இதற்கு ஊராட்சி மன்ற செயலரும் துணை போயுள்ளார் அதுமட்டுமின்றி கூட்டத்தின் போது தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினரையும் அவர்களுக்குகான இருக்கையில் அமர விடாமல் அலுவலகத்திற்குள் தரையில் அமர வைத்துள்ளனர் ஊராட்சி தலைவருக்கான நாற்காலியில் சமூகத்தை சார்ந்த துணைத்தலைவர் மற்ற சமூகத்தை புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது
தலைவர் மிரட்டுகிறார் இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் செய்தியாளர்கள் கூறுகையில் சம்பவங்கள் அனைத்தும் உண்மைதான் கீழ் சாதி என்பதால் தரையில் உட்கார வைத்திருக்கிறார்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனால் எனது மனைவி தாழ்ந்த சாதி என்பதால் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் மேல் சாதிக்காரர்கள் தடுத்துவிட்டனர் மேல் சாதியை சார்ந்த துணைத்தலைவர் எப்போது சொல்கிறாரோ அப்போதுதான் ஊராட்சி மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என மிரட்டுகிறார் அவர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர் இங்கு நடக்கும் சம்பவம் வெளியில் சொன்னால் ஊராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேல் சாதிக்காரர்கள் அதிகமாக இருப்பதால் தலைவர் பதவியில் இருந்து எடுத்து விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர் இந்த மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இதனால் ஊராட்சி மன்ற பணிகள் செய்ய முடியவில்லை அவர்கள் மீறி எந்த பணியும் செய்ய விடுவதில்லை ஒத்துழைப்பு கொடுப்பதில்லை இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளதாக கூறினார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் செயல்பட அனுமதிக்காமல் சாதி ஆதிக்கசக்தியினர் மிரட்டி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் துறையின் அமைச்சர் உடனடியாக தலையிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் தலைவர் ஊராட்சி மன்ற நிர்வாகப் பணிகளை சுதந்திரமாக நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button