இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மதியவிரிவான பரபரப்பு செய்திகள்(18.9.2019) தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்????

advertisement by google

திருச்சி : லால்குடி அருகே பொது கழிப்பறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுப்பு – போலீசார் விசாரணை.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

காவிரி நீர் திறப்பு நிலவரம்

advertisement by google

கர்நாடகா : கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 8,599 கன அடி நீர், கபினி அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ?????முதுநிலை ஆசிரியர் பணி :ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

advertisement by google

??முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

advertisement by google

??தமிழக பள்ளி கல்வித்துறையில், காலியாக உள்ள, 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

advertisement by google

??கணினி வழியில் நடத்தப்படும், இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, ஏற்கனவே முடிந்து விட்டது.நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.

advertisement by google

??தேர்வுக்கான கால அட்டவணையையும், டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள், டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு தேதி விபரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

??இந்தத் தேர்வு, வரும், 27, 28, 29ம் தேதிகளில், முற்பகல் மற்றும் பிற்பகலில், பாட வாரியாக பிரிக்கப்பட்டு, கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

⭕⭕இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

♦♦தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை பிரதி எடுத்து, ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும், தேர்வு மையத்துக்கு தவறாமல் எடுத்து வர வேண்டும்.

♦♦ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரத்திற்குள், தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.

♦♦தேர்வு நாளன்று முற்பகல் தேர்வுக்கு, காலை, 7:30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்வுக்கு, 12:30 மணிக்குள்ளும், தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வர வேண்டும்.

♦♦இந்த கணினி வழி தேர்வுக்கு, பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களின் உள் நுழைவு குறியீட்டை பயன்படுத்தி, டி.ஆர்.பி., இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

♦♦அதிலுள்ள வினாக்கள் பயிற்சிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை, தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: #BREAKINGNEWS

ராஜாமடம் to #பட்டுக்கோட்டை இணைப்புச்சாலையில் நடுவிக்காடு என்னும் இடத்தில் இருவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஓர் வாகனம் வந்துள்ளது அந்த வாகனத்தின் டயர் வெடித்தவுடன் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியது அதன் பின்னால் பைக்கில் சென்ற ராஜாமடம் அரசுப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் ஓருவர் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் ஓருவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார் சம்பவ இடத்தில் தஞ்சாவூர் செந்தில்குமார் உயிர் பிரிந்தது…,

[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: 2019 செப் 18
காலை 9 மணி

அதிமுக பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஷி பெற்றோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்திக்கிறார்
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

சர்ச்சைக்குரிய ராமர் ஜென்ம பூமி -பாபர் மசூதி அமைந்துள்ள 2 புள்ளி 77 ஏக்கர் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்வதற்கான தேதியை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்து மற்றும் முஸ்லீம் மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முடிக்க விரும்பும் தேதியை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.25 நாட்களாக இருதரப்பு வாதப்பிரதிவாதங்கள் அனல் பறக்க, அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் நவம்பர் 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.தமது காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போகும் நிலையில், தமது ஓய்வுக்குப் பின்னர் வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை ரஞ்சன் கோகய் உருவாக்க வேண்டியிருக்கும்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

? நேரலையில் —–போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

?புதுச்சேரி : காரைக்காலில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!-

பல கட்சி ஜனநாயகம் தோல்வியடைந்து விட்டதாக, மக்கள் இப்போது நினைக்கத் தொடங்கி விட்டார்கள் என்று, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான, அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

இந்தி தினம் நாளை முன்னிட்டு, அது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, இந்த நாட்டின் தேசிய மொழியாகும் தகுதி இந்திக்கு உள்ளதாக தெரிவித்திருந்தார்.தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த கருத்து. வரும் 20ஆம் அமித் ஷா கருத்தை கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் கன்னட அமைப்புகள் இவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா?!பல கட்சி ஜனநாயகம்இந்தி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, தற்போது பல கட்சி ஆட்சி முறை தோல்வியடைந்தது என்று அமித் ஷா தெரிவித்துள்ளது மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. “சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மக்கள் மனதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை என்பது தோல்வி அடைந்து விட்டது என்று அவர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதுபோன்ற நடைமுறை வைத்துக் கொண்டு நமது குறிக்கோள்களை எட்ட முடியாது என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர்” என்று கூறியுள்ளார் அமித் ஷா. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் கூட்டணி ஆட்சிஅமித் ஷா மேலும் கூறியதை பாருங்கள்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் ஆட்சி காலத்தின்போது, அந்த அரசு திக்கு திசை இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு கொள்கை கோட்பாடும், அவர்களுக்கு கிடையாது. தினந்தோறும் ஏதாவது ஒரு ஊழல் தொடர்பான செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது.எல்லைகாங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின்போது, இந்திய நாட்டின் எல்லைகள் பாதுகாப்பில்லாமல் இருந்தன. நமது நாட்டின் ராணுவ வீரர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர். ஏதாவது ஒரு பிரச்சினைக்காக பொதுமக்கள் தினந்தோறும் சாலைக்கு வந்து போராடும் நிலைமையில் இருந்தது இந்த நாடு. எப்போதுமே அரசியல் ஆதாயத்திற்காகதான் காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுகளை எடுத்தது. ஆனால், தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வாக்கு வங்கி அரசியலை தவிர்த்து விட்டு மக்களுக்கு எது தேவையோ அதை மட்டும் செய்கிறது.அவசரமாக 50 முடிவுகள்இந்த நாட்டில் சில அரசுகள், பெரிய முடிவு ஒன்றை எடுப்பதற்கு 30 ஆண்டு காலம் வரை செலவழித்தனர். ஆனால் எங்கள் அரசு, வெறும் ஐந்து ஆண்டுகளில் மிக முக்கியமான 50 முடிவுகளை எடுத்துள்ளது. இதில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, விமானப்படை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கும். இது போல குறுகிய காலத்தில் இத்தனை முக்கியமான முடிவுகளை எடுத்த எந்த அரசையும் இந்தியா பார்த்தது கிடையாது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.சீனாவா, அமெரிக்காவாபல கட்சி ஜனநாயக நடைமுறை மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக அமித் ஷா கூறியுள்ளதன் மூலம், சீனா போல ஒற்றைக் கட்சி ஜனநாயக நடைமுறையை கொண்டு வருவதற்கு அல்லது அமெரிக்கா போல இரட்டை கட்சி ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு அமித் ஷா விரும்புகிறாரா என்று சந்தேகங்கள் எழுந்து உள்ளன.காங்கிரஸ் இல்லாத இந்தியா2014-ம் ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்ற கோஷத்தை பாஜக முன்வைத்தது. அப்போதே, ஜனநாயக ஆர்வலர்கள் இதுபோன்ற கோஷம் ஆபத்தில்தான் சென்று முடியும் என்று எச்சரித்திருந்தனர். இப்போது ஏறத்தாழ காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், பிற கட்சிகளும் தேவையில்லை என்பது போன்ற கருத்தை முன்வைத்துள்ளார் அமித் ஷா. இது அடுத்தடுத்து இந்திய அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து

40 நாட்களுக்கு பிறகு கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து தொடங்கியது

ஆக.8ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் கூடலூர் – மலப்புரம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே 750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற 4 பேர் கைது – காவல்துறை விசாரணை
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை தாக்கிய வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும், பாதுகாப்பை உறுதி செய்திடவும் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை தாக்கிய வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும், பாதுகாப்பை உறுதி செய்திடவும் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???நான் நினைத்திருந்தால் கவர்னர் ஆகியிருப்பேன்- ராமதாஸ்

தனக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது என்றும் தான் நினைத்து இருந்தால் எப்போதே கவர்னர் ஆகி இருப்பேன் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? – ஐ.பெரியசாமி பதில்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? என்பது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று ஐ.பெரியசாமி கூறினார்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???4 தமிழக எம்.பி.க்கள் வெற்றிக்கு எதிராக வழக்கு – தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 4 எம்.பி.க்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் வெள்ளி கலசம், போட்டோ ஸ்டேண்ட் தலா ரூ.1 கோடிக்கு ஏலம்

பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலத்தில் வெள்ளி கலசம் மற்றும் மோடி படத்துடன் கூடிய போட்டோ ஸ்டேண்ட் ஆகியவை தலா ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???பஞ்சாப்: இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் போதைப்பொட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???மருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் – மத்திய மந்திரி

மருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பட்னாவிஸ் மனைவி

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பிரதமர் மோடிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???ராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – ஈரான் திட்டவட்டம்

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???மலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி

மலேசியாவில் அடைக்கலம் அடைந்துள்ள இஸ்லாமிய மதப்பிரச்சாரகர் ஜாகிர் நாயக் அந்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிடுவது குறித்து பிரதமர் மஹதிர் முஹம்மது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???வடகொரியா செல்ல விருப்பம் இல்லை – டிரம்ப் பேட்டி

குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
[9/18, 3:14 PM] விண்மீண்நியூஸ்2: ???காஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

காஷ்மீரில் தேசியதலைவர்கள் அனைவரையும் மத்திய அரசு வீட்டுச்சிறையில் அடைத்திருப்பதால் அங்கு பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.??????????????????

advertisement by google

Related Articles

Back to top button