இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியின் தந்தை இறப்பு?ஆனாலும் யூனிபார்முடன் மிடுக்காகவும், கம்பீரமாகவும் வந்து நின்று ஒரு சல்யூட்? நெல்லையென்ன தமிழ்நாடே மிரண்டது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

நேத்து ராத்திரிதான் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரியின் அப்பா இறந்துட்டாரு…..

advertisement by google

ஆனாலும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி யூனிபார்முடன் மிடுக்காகவும், கம்பீரமாகவும் வந்து நின்று ஒரு சல்யூட் வைத்ததுமே நெல்லை மாவட்டமே மிரண்டு விட்டது!

advertisement by google

நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.. கலெக்டர் ஷில்பா பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்.ஒவ்வொருவராக வந்து தங்கள் மரியாதையை தொடங்கினர்.. அப்போதுதான் அங்கு வந்து மிடுக்காக நின்று சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பார்த்ததும் கலெக்டர் முதல் எல்லாருமே உறைந்து போய்விட்டனர்,

advertisement by google

இதற்கு காரணம்.. மகேஸ்வரியின் அப்பா நேற்று ராத்திரி இறந்துவிட்டார்.. அவர் பெயர் நாராயணசுவாமி.. 83 வயதாகிறது.. உடம்பு சரியில்லாமல் இருந்தவர் நேற்றிரவு இறந்துவிட்டார். அப்பா இறந்த தகவல் மகேஸ்வரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.. கதறி கதறி அழுதார்.. இன்று அவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு புறப்பட இருந்தார். ஆனால் திடீரென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பும் நடத்துவதற்கு திடீரென ஒருவரை மாற்றியமைக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

advertisement by google

குடும்பத்தினர் தகவல் அதனால், இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து விட்டு, அதன்பிறகு ஊருக்கு செல்ல மனசு நிறைய துக்கத்தை தேக்கி வைத்த கொண்டு, யூனிபார்மில் உணர்ச்சி பொங்க சல்யூட் வைத்து, அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய மகேஸ்வரியை அனைவரும் ஆச்சரியமும், பெருமையும் விலகாமல் பார்த்தனர்..

advertisement by google

விழா சிறப்பாக முடிந்தவுடனேயே, சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். இரவெல்லாம் மகேஸ்வரி எந்த மனநிலையில் இருந்திருப்பார் என்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை.. ராட்சசி படத்தில்கூட இப்படித்தான் ஒரு சீன் இருக்கும்… அப்பா இறந்த அன்றே ஸ்கூலுக்கு வருவார் ஜோதிகா.. இப்படி ஒரு நிகழ்வு நம் கண்ணெதிரிலேயே நடந்துள்ளதை என்னவென்று சொல்வது. மகேஸ்வரியின் கணவர் பாலமுருகன், நெல்லை மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு காவலராக இருக்கிறார்… இவர் மகேஸ்வரிக்கு மேல பணியின் மீது ஈர்ப்பு கொண்டவர்.. இந்த 4 மாசமாக கொரோனா பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இவர் மேற்கொண்டு வந்தார்…

advertisement by google

ஆனால் 2 வாரத்துக்கு முன்பு இவருக்கும் தொறுற்று பாதிப்பு வந்துவிட்டது.. நேற்றுதான் குணமாகி டியூட்டிக்கு வந்திருக்கிறார்… இப்போது அடுத்த சோகம் அந்த குடும்பத்துக்கு வந்துள்ளது.கண்ணீருடன் புறப்பட்ட மகேஸ்வரியை அதிகாரிகள் ஆறுதல் சொல்லி வழி அனுப்பி வைத்தனர்… மகேஸ்வரியின் துக்கத்தில் நாமும் பங்கெடுத்து கொள்வோம்.. ஆனால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் சரி, எத்தனை கொடுமைகளை நாம் சந்தித்து வந்தாலும் சரி.. இதுபோன்ற மகேஸ்வரிகள் நம்மை இன்னமும் உயிர்ப்புடன் உலாவ விட்டு வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button