பயனுள்ள தகவல்மருத்துவம்

பிரெட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதா அல்லது கேடா.?முழுவிவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

விண்மீண்நியூஸ்:
பிரெட் சாப்பிடுவது உடல்நலத்திற்குக் கேடா.?

advertisement by google

அதிகமான கார்போஹைட்ரேட் கலப்படம் இருப்பதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்கின்றனர்.

advertisement by google

உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் முதலில் பரிந்துரைப்பது பிரெட் தான். அதேபோல் காலை உணவிற்காக பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட் , பிரெட் ஜாம் என சாப்பிடுவார்கள். வீட்டில் எதுவுமில்லை பசியைப் போக்க வேண்டுமெனில் பிரெட் இருந்தால் உடனே டோஸ்ட் செய்து சாப்பிடுவது என பிரெட் பல வீடுகளில் பல வகைகளில் உதவுகிறது. ஆனால் இந்த பிரெட் நல்லதா என்கிற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது. அதைத் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை.

advertisement by google

இதை எகிப்தியர்கள் தான் முதன் முதலில் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். அன்று ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்டது. இன்றோ கார்போஹைட்ரேட் அதிகமாக சேர்ப்பதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் டையட் பின்பற்றுவோர் முதலில் தவிர்க்கும் விஷயம் பிரெட் தான்.

advertisement by google

அதேபோல் பிரட்டுகளை கெட்டுப் போகாமல் நீண்ட நாட்களுக்கு வர அதைப் பதப்படுத்த சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்ப்பதாகவும், உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் சேர்ப்பதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர்.

advertisement by google

இதில் அதிகமான கார்போஹைட்ரேட் கலப்படம் இருப்பதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்கின்றனர். அதேபோல் தானியங்களான கோதுமை, ராகி போன்றவற்றில் செய்யப்படும் பிரெட்டுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்புச் சத்து போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால் வெள்ளையாக இருக்கும் பிரெட்டுகள் இப்படி எதுவுமே இல்லாததாக உள்ளது.

advertisement by google

சிலருக்கு க்ளூடன், தானியம் ஒவ்வாமை இருந்தால் இந்த பிரெட் முற்றிலும் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. எனவே பிரெட் என்பதும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் உள்ளது.

advertisement by google

உடல்நிலை சரியில்லாத போதும் உடலுக்கு ஆற்றல் தர அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் உதவும் என்பதாலேயே கொடுக்கப்படுகிறதே தவிர அதனால் சத்துக்கள் ஏதுமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

வேண்டுமென்றால் தானிய வகைகளில் தயாரிக்கப்பட்ட பிரெட் தரலாம். அதுவும் அவர்களுக்கு அலர்ஜி இருந்தால் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

தினமும் பிரட் சாப்பிட வேண்டாம் என்பதற்கான காரணங்கள்!!!

எல்லோரும் கஷ்டப்பட்டு உழைப்பது நமது அன்றாட உணவிற்கே! இதை சற்று ட்ரெண்ட்டாக கூற வேண்டுமெனில் “அன்றாட பிரட்டிற்காகவே நாம் கடினமாக உழைக்கிறோம்” என்பார்கள். ஆனால் இதையே சீரியஸாக எடுத்துக் கொண்டு, தினமும் பிரட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி, உடல் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.

மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் தான் பிரட். இது உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகியுள்ளது. நமது உணவுப் பழக்கத்திலிருந்து இதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமாகாது. எனினும் நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும். ஏனெனில் இதனால் பல தீங்குகளை பெறக்கூடும். இப்போது அந்த தீங்குகள் என்னவென்று பார்ப்போம்.

பிரட்டில் ஊட்டச்சத்து கிடையாது.

பிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. அதுமட்டுமின்றி வாய்க்கு சுவையாக வயிறு நிறைய சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்க்கின்றோமா? என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் பிரட் சாப்பிடுவதால் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. வேண்டுமெனில் கோதுமை பிரட், முழுதானிய பிரட் போன்றவற்றில் சிறிதளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிகளவில் சோடியம் நிறைந்தது.

பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட் டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிக்கும்.

பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

பசி அடங்காது.

ஒயிட் பிரட் சாப்பிடுவதா? ப்ரவுன் பிரட் சாப்பிடுவதா? என்று பார்க்கும் போது, ஒயிட் பிரட் சுவையாக இருப்பதால், அதிகமானோர் ஒயிட் பிரட்டையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும்

பசி அடங்காது. ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதாலும், ஏனைய ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தினாலும் பசி அடங்குவதில்லை.

க்ளுட்டன்/பசைத்தன்மை.

பிரட்டில் உள்ள க்ளுட்டன் என்னும் பொருள் நிறைய நோய்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு பிரட் சாப்பிட்ட பின்னர் வயிறு உப்புசம் ஏற்படுவது, உடற்குழி நோய்க்கான அறிகுறியாகும். இது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் இவ்வாறு ஒவ்வாமை நிலை ஏற்படுவோர், தமது உணவுப் பழக்கத்திலிருந்து பிரட்டை விலக்கி விட வேண்டும்.

கார்போஹைட்ரேட் பெருமளவில் உள்ளது.

பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். பொதுவாக குறைந்தளவு கார்போஹைட்ரேட் உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமானால் ‘ப்ரைன் ஃபாக்’ (brain fog) நோயை உண்டாக்கும். அதாவது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் சீரற்ற நிலையை உருவாக்குவதால், நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button