இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

காலை பரபரப்பு விரிவான செய்திகள்(18.9.2019)தமிழகம் இந்தியா உலகம்வரை

advertisement by google

????விண்மீண்நியூஸ்?????winmeennews.com படிங்க??

advertisement by google

?®? பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜிங் பிங் இடையே நடக்கும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில்,

advertisement by google

⭕®⭕ காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது என சீனா கூறியுள்ளது…

advertisement by google

?‹செய்தி®களஞ்சியம்›?
[9/18, 10:08 AM] விண்மீண்நியூஸ்2: ??®??

advertisement by google

?®? “பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காத மத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது!”

advertisement by google

⭕ பிரியங்கா காந்தி…

advertisement by google

?‹செய்தி®களஞ்சியம்›?
[9/18, 10:08 AM] விண்மீண்நியூஸ்2: ?????முதுநிலை ஆசிரியர் பணி :ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

advertisement by google

??முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

??தமிழக பள்ளி கல்வித்துறையில், காலியாக உள்ள, 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

??கணினி வழியில் நடத்தப்படும், இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, ஏற்கனவே முடிந்து விட்டது.நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.

??தேர்வுக்கான கால அட்டவணையையும், டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள், டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு தேதி விபரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

??இந்தத் தேர்வு, வரும், 27, 28, 29ம் தேதிகளில், முற்பகல் மற்றும் பிற்பகலில், பாட வாரியாக பிரிக்கப்பட்டு, கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

⭕⭕இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

♦♦தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை பிரதி எடுத்து, ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும், தேர்வு மையத்துக்கு தவறாமல் எடுத்து வர வேண்டும்.

♦♦ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரத்திற்குள், தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.

♦♦தேர்வு நாளன்று முற்பகல் தேர்வுக்கு, காலை, 7:30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்வுக்கு, 12:30 மணிக்குள்ளும், தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வர வேண்டும்.

♦♦இந்த கணினி வழி தேர்வுக்கு, பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களின் உள் நுழைவு குறியீட்டை பயன்படுத்தி, டி.ஆர்.பி., இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

♦♦அதிலுள்ள வினாக்கள் பயிற்சிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை, தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
[9/18, 10:08 AM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதானதால்,

⭕®⭕ தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிப்பு…

?‹செய்தி®களஞ்சியம்›?
[9/18, 10:08 AM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? “எங்களுக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி…

⭕®⭕ உலகம் முழுதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாங்கள் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்வோம்!”.

⭕ இஸ்ரோ…

?‹செய்தி®களஞ்சியம்›?
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : அரசு ஊழியர் சங்க முன்னணி தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும், ஜேக்டோ ஜியோ போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருபவர் வெ.செந்தில் குமார். தமிழக அரசு எவ்வித அவசியமுமின்றி, செந்தில்குமாரை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது. இதேபோல ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை தமிழக அரசு இடமாறுதலை செய்துள்ளது. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்க முடியாத தமிழக அரசு, இந்த ஊழியர்களை பணியிட மாறுதல் செய்துள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக உடனடியாக இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு அரசு ஊழியர்களின் கோரிக்கையை பேச்சுவார்த்தையின் மூலமாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் சு.குமார் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் முத்துராஜ், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசு, ராஜசேகர் உள்ளிட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

ஆட்சியர் உமா மகேஸ்வரி
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத் துறை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் இன்று மாலை திடீரென அகற்றும் பணியில் ஈடுபட்டதால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக உதகையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரத்தில் அதிக அளவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை இன்று மாலை அகற்றினர்.
அரசு அதிகாரிகள் கடைகளை அகற்றும் முன், கடையின் உரிமையாளர்கள் சரியான முறையில் ரசீது வைத்துள்ளதாகவும் கடையை ஏன் எடுக்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். நெடுஞ்சாலையில் நடைபாதையில் கடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்த கடைகளை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் போது கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் கடைகளை அகற்றும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
அதிகபாரம் ஏற்ற கட்டாயப்படுத்தக்கூடாது, ஏற்கனவே வழங்கிய வாடகையை குறைக்காமல் வழங்க வேண்டும் என்பதற்கு சென்னை துறைமுகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கும்வரை கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும்

தமிழ்நாடு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் மனோகரன் பேட்டி
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪முதுநிலை ஆசிரியர் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை பட்டதாரி , உடற்கல்வி இயக்குனர் நிலை 1கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

www.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்: கூடுதல் துணை ஆணையர் சுற்றறிக்கை

உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் சீருடையில் வந்தாலும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என கூடுதல் துணை ஆணையர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததை தொடர்ந்து கூடுதல் துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் காவல் கூடுதல் துணை ஆணையர் கடிதம் அனுப்பினார்.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪ #BREAKING :

“அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்” – பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு

பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாவட்டத்தில்‌, மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்களில்‌, பெரும்பான்மையாக மூத்தக்குடிமக்களை மட்டுமே நிர்வாக குழுவில்‌ உறுப்பினராக சேர்க்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ மூத்த குடிமக்களுக்கென நீண்ட கால ஒப்பந்த அடிப்படையிலும்‌, விற்பனை அடிப்படையிலும்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கி வரும்‌ நிறுவனங்களை முறைப்படுத்த அரசாணை எண் 83 சமூகநலம்‌ மற்றும்‌ சத்துணவுத்‌ திட்டத்துறையின்‌ மூலம்‌ 23.11.2016 அன்று தமிழக அரசால்‌ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையில்‌ பிரிவு iX (i)-ன்படி மூத்தக்குடிமக்கள்‌ தங்கள்‌ செலுத்தும்‌ வைப்பு நிதிக்கு பாதுகாப்பு பெறவும்‌, நிறுவனத்தில்‌ கணக்கு வழக்குகள்‌ வெளிப்படையாக இருக்கும்‌ பொருட்டும்‌ மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்களில்‌,பணம்‌ செலுத்திய பெரும்பான்மையான மூத்த‌ குடிமக்களை மட்டுமே நிர்வாக குழுவில்‌ உறுப்பினராக சேர்க்க வேண்டும்‌.

எனவே, மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்கள்‌ உடனடியாக அரசாணை எனர்‌:83 -ல்‌ உள்ள பிரிவுiX (i)யை நடைமுறைப்படுத்த வேண்டும்‌. மேலும்‌, இந்த ஆணையிலுள்ள மற்ற பிரிவுகளையும்‌ செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும்‌, மூத்த குடிமக்களுக்கு நீண்ட கால ஒப்பந்தம்‌ மற்றும்‌ விற்பனை அடிப்படையில்‌ குடியிருப்புகள்‌ வழங்கி வரும்‌ மூத்த குடிமக்கள்‌ வளாக நிர்வாகிகள்‌ இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்‌. என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்கீழ்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மீன்வளம்‌, பால்வளம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச்‌செயலாளர்‌ சர்பேஸ்வர்‌ மஜி அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, ஜி.வி.குடியிருப்பு பகுதியில்‌ ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்கீழ்‌ மியாவாக்கி முறையில்‌ மரங்கள்‌ நடும்‌ பணிகளையும்‌, பீளமேடு பகுதியிலுள்ள தனியார்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ அமைக்கப்பட்டுள்ள மழைநீர்‌ சேகரிப்பு கட்டமைப்பினையும்‌ மற்றும்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்‌ அமைக்கப்பட்டுள்ளதை மீன்வளம்‌, பால்வளம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச்‌ செயலாளர்‌ சர்பேஸ்வர்‌ மஜி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், சிங்காநல்லூர்‌ குளம்‌, வெள்ளலூர்‌ குளம்‌, குறிச்சி குளம்‌ ஆகியவற்றில்‌ நீர்நிலைகளின்‌ மேம்பாட்டுப்‌ பணிகள்‌ குறித்தும்‌, உக்கடம்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்‌ நடைபெற்று வரும்‌ பணிகள்‌ குறித்தும்‌ அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள்‌ சுந்தாராஜன்‌, பிரபாகரன்‌, ஜான்சன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : காவேரி கூக்குரல் திட்டத்திற்கு உள்ளாட்சித்துறை சார்பில் ஐந்து கோடி மரங்கள் கூட கொடுக்க தயாராக இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

காவிரி கூக்குரல் நிறைவு விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில். காவிரி கூக்குரல் இயக்கத்திற்காக கடந்த 3ம் தேதியில் இருந்து வேளாண் காடு வளர்ப்பதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கத்தை சத்குரு துவங்கி இருக்கின்றார். இந்த திட்டத்தின் மூலம் 242 கோடி மரங்களை நடுவது என்பது சிறப்பம்சமாகும் என்றவர், மழைநீர் சேகரிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றார்.
மேலும், குடிமராமத்து திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் நதிகள் சீரமைக்கும் திட்டத்தை துவங்கி, எல்லா மாநிலத்திற்கும் சென்று காவிரி கூக்குரல் திட்டத்திற்கு அனைவரையும் ஒன்றிணைத்துள்ள சத்குரு, கோவை மாவட்டத்தில் இருப்பதே பெருமை எனவும் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
சத்குருவின் திட்டங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவேரி கூக்குரல் திட்டத்திற்குத் தேவையான மரக்கன்றுகளை, உள்ளாட்சித் துறை சார்பில் 5 கோடி மரங்கள் கேட்டால் கூட கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். சில மரங்களை வளர்ப்பதற்கு, அனுமதி வழங்குவதற்கு எளிமைப்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தற்போது, கோவையில் பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, பாலங்கள் கட்டும் போது போக்குவரத்து நெரிசலை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் பாலத்திற்கு டிசைன் முடிந்து விட்டதாகவும் விரைவில் பாலம் பணிகள் துவங்கும் என்றார். மேலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னனியினரை கண்டித்து திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி சார்பில் கடந்த 5ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது, திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விநாயகர் சிலையுடன் அத்துமீறி புகுந்த இந்து முன்னணியினர் சிலர், நன்கொடை தராத காரணத்தால் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கியும் அங்கு பணி செய்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் இந்த முன்னணியினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்து முன்னணியின் இத்தகைய செயலை கண்டித்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி முன்பு திமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கைது செய்ய போலீசார் முற்பட்டபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் கைது செய்யாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ❇winmeennews.comசெய்தி கதம்பம்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் (தோராயமாக)

அதிரடியாக உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில்

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.75.26 ஆகவும்,

டீசல், நேற்றைய விலையில் இருந்து 26
காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.69.57 ஆகவும் உள்ளது.

இந்த விலை இன்று (18.09.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ❇winmeennews.comசெய்தி கதம்பம்
தவறுதலாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ. 40 லட்சத்தை எடுத்து சொத்து வாங்கிய கணவன்-மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: winmeen live ……

ஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெசல் கிராமத்தில் வாகன சோதனையின் போது 25,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு டேங்கர் லாரி மற்றும் சரக்கு வாகனத்தை போலீஸ் மடக்கிய போது எரிசாராயம் பிடிப்பட்டது. சரக்கு வாகனத்தில் 500 கேன்களில் எரிசாராயத்தை கடத்திய ஓட்டுநர் உட்பட 4 பேர் தப்பியோடியுள்ளனர்.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ⛈⛈⛈சீர்காழி மற்றும் ஓசூரில் பலத்த மழை..!

நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துள்ளது.

காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட கனமழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான, மத்திகிரி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Winmeennews.comசெய்திகுழுமம்
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி..!

⭕®⭕ வழக்கறிஞர்களின் வாகனங்களையும் சோதனைக்குள்ளாக்க ஆணை…!

?‹winmeennews.comசெய்தி®களஞ்சியம்›?
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று புதன்கிழமை (செப்.18) முறையே லிட்டருக்கு 27 காசுகளும், 26 காசுகளும் உயர்ந்துள்ளது. எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமலும், எந்த மாற்றமும் ஏற்படாமலும் இருந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்த நிலையில் இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்…

?‹செய்தி®களஞ்சியம்›?
[9/18, 10:14 AM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,000 ஆயிரம் கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக குறைந்துள்ளது.

⭕®⭕ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

⭕®⭕ நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 14,000-ல் இருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது…

?winmeennews.comசெய்தி®களஞ்சியம்›?

advertisement by google

Related Articles

Back to top button