இன்றைய சிந்தனைகல்விபயனுள்ள தகவல்

நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே?முழுவிவரம் -ஆசிரியர்எழுத்தாளர்& வெளியீட்டாளர் விண்மீன்TAV MSCBEd, விண்மீன்நியூஸ்

advertisement by google

1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”
2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயெனப் பார்.
4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதை விட, முன் கண்ணாடி வழி முன்னே வருவதைப் பார்.
5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.
6) முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
8) ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை – நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் – சாதியுங்கள் ஒரு சோகம் – தாங்கிக் கொள்ளுங்கள் ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள் ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்
10) கற்றுக் கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக் கொடு!! கற்றுக் கொள்வாய்!!! பெற்றுக் கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக் கொடு!! பெற்றுக் கொள்வாய்!!!
11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக் கொள்.
13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்..winmeennews, vinnolinews

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button