விரிவான காலை செய்திகள்(3.10.2019)தமிழகம் இந்தியாஉலகம்
??winmeennews.com??150 ரூபாய் காந்தி நினைவு நாணயம் – பிரதமர் மோடி வெளியிட்டார்
மகாத்மா காந்தியின் *
150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட
150 ரூபாய் நாணயத்தை குஜராத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: ???வயநாட்டுக்கு 4-ந்தேதி ராகுல் காந்தி வருகை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 4-ந்தேதி வயநாடு செல்கிறார். அங்கு தொகுதி மக்களை சந்தித்து பேசுகிறார்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: ???எம்.எல்.ஏ. சீட் ரூ.5 கோடிக்கு விற்பனை – அரியானா முன்னாள் காங். தலைவர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டும் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: ???வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வருகை
வங்காளதேச பிரதமர் சேக் ஹசினா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: ???பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்
பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: ???பெரு நாட்டில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி
பெரு நாட்டில் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
நெல்லை: ராதாபுரம் கருவூலத்தில் உள்ள 203 தபால் ஓட்டுக்களை எடுத்து செல்ல மாவட்ட ஆட்சியர் இன்று காலை 10 மணிக்கு ராதாபுரம் வருகிறார்.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: ???தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தூய்மை மற்றும் துப்புரவில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது.
[10/3, 10:55 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
புதுக்கோட்டையில் பிடிப்பட்ட 6 வடமாநில இளைஞர்களுக்கும், திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது – திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தகவல்
நகைக்கடை கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம் – காவல் ஆணையர் அமல்ராஜ்
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள்- காவல்துறை தகவல்
திருச்சி நகைக்கடை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றது வடமாநில கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறி உள்ளது.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசிய டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை- சித்தராமையா
காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசிய டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???தூய்மையான ரெயில் நிலையங்களில் ஜெய்ப்பூருக்கு முதலிடம்
தூய்மையான ரெயில் நிலையங்களில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ரெயில் நிலையங்கள் முதல் 3 இடங்களை பிடித்து உள்ளன.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழியுங்கள்’ – அமித்ஷா வேண்டுகோள்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாட்டுக்கும், உலகுக்கும் பெரிய ஆபத்து என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கி கடன் – மத்திய அரசு
இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளில் உடனடி கடன் வழங்கப்படுகிறது. பண்டிகை காலத்தையொட்டி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???மாலியில் ராணுவ சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி
மாலியில் ராணுவ சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்தியி தாக்குதலில் 25 ராணுவவீரர்கள் பலியாகினர்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மர்ம மரணம்
ஐதராபாத்தில் வீட்டில் தனியா இருந்த இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???ஜனநாயக கட்சியினரை சாடிய டிரம்ப் – ‘‘பதவி நீக்க நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது’’
ஜனநாயக கட்சியினர் தன்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
கோவை, சேலம் உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை இன்று உலகம் மரியாதையுடன் பார்க்கிறது – மோடி
உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை இன்று உலகம் மரியாதையுடன் பார்ப்பதாக தெரிவித்தார்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???வெறுப்பு இல்லா உலகம் படைக்க அனைவரும் ஒன்றுபடுவோம்’ – பிரதமர் மோடி அழைப்பு
காந்தியடிகளின் கனவை நனவாக்கும் வகையில், வெறுப்பு இல்லா உலகம் படைக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என சர்வதேச சிந்தனையாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
[10/3, 10:58 AM] விண்மீன்நியூஸ்: ???பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனை
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்த சில மணி நேரத்தில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை சோதித்து அதிரவைத்தது.
[10/3, 11:00 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு
செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடந்தது
[10/3, 11:00 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் விடுவிப்பு
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தால் வீட்டு காவலில் தலைவர்கள் வைக்கப்பட்டனர்
இரண்டு மாதங்களுக்கு பின் ஜம்முவில் உள்ள அரசியல் தலைவர்கள் விடுவிப்பு
[10/3, 11:00 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு – இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது
[10/3, 11:00 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
சென்னையில் குற்றச்செயல்கள் ஈடுபட்டு வந்த 8பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
[10/3, 11:00 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
கருத்து கேட்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்வது குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவு
[10/3, 11:00 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது??winmeennews.com??