இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் யானையான செங்கமலம் திடீரென மீண்டும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது?இதற்கு பின் இருக்கும் சுவாரசியமான விஷயம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் யானையான செங்கமலம் திடீரென மீண்டும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

advertisement by google

இதற்கு பின் இருக்கும் சுவாரசியமான விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

advertisement by google

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பல்வேறு விஷயங்களுக்கு பேமஸ்.

advertisement by google

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் முக்கிய மையமாக இருந்ததுதான் மன்னார்குடி.

advertisement by google

இனியும் கூட அப்படி ஆக வாய்ப்பு இருக்கிறது.

advertisement by google

குஞ்சப்பன் செட்டியார் கடை தொடங்கி ஹரித்ரா நதி வரை பல விஷயங்கள் மன்னார்குடிக்கு பேமஸ்.

advertisement by google

அதிலும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், டெல்டாவில் இருக்கும் மிக அழகிய பெரிய கோவில்களில் ஒன்றாகும்.

advertisement by google

வருடா வருடம் இங்கு நடக்கும் திருவிழா தொடங்கி வெண்ணையடி விழா வரை எல்லாம் வைரலாகும்.

கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரையானை பேமஸ்இப்படி இருக்கும் மன்னார்குடியின் புதிய அடையாளமாக மாறி உள்ளது, ராஜகோபால சுவாமி கோவில் யானை செங்கமலம்.

பாப் கட் வைத்து கொண்டு ஸ்டைலாக வலம் வரும் இந்த யானை கடந்த சில வருடங்கள் முன்பே வைரல் ஆனது.

தற்போது திடீரென இணையம் முழுக்க இந்த செங்கமலம் திடீர் என்று வைரலாகி உள்ளது.

கருங்சிவப்பு நிற பாப் கட் முடிதான் இது பேமஸ் ஆக காரணம்.

உலகம் முழுக்க வைரல்தற்போது உலகம் முழுக்க இந்த யானை டிரெண்ட் ஆகியுள்ளது. ஆம் திடீரென இந்த யானை குறித்து எல்லோரும் பேச தொடங்கி உள்ளனர்.

உலக மீடியாக்கள் கூட சில செங்கமலம் குறித்து பேச தொடங்கி உள்ளது.

எப்போதும் இந்த யானை புத்துணர்வு முகாம்களுக்கு செல்லும் போதெல்லாம் பெரிய அளவில் வைரல் ஆகும்.

ஆனால் இப்போது எங்கும் செல்லாமலே அந்த யானை டிரெண்டாகி உள்ளது.

மன்னார்குடி வந்தது எப்போதுஇந்த பாப் கட்டிங் செங்கமலம் கடந்த 2003ம் ஆண்டு மன்னார்குடி வந்தது. அங்கு இருந்த யானையின் மறைவை தொடர்ந்து கோவிலுக்காக இந்த குட்டி யானை வாங்கப்பட்டது. இந்த யானை வந்த போது அதன் தலையில் பெரிய அளவில் முடிகள் இல்லை. இருந்த முடியும் கூட அடிக்கடி உதிர்ந்து வந்தது. பெரிய அளவில் இந்த யானை யாரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

காரணம் யார்?இந்த நிலையில் இந்த யானையின் பாகன்தான் இது வைரல் ஆகவே காரணம்.இந்த யானையின் பாகன் ராஜகோபாலன் தான் இதற்கு பாப் கட்டிங் வெட்டி விட்டது. சாதாரணமாக இருந்த முடியை, ஸ்டிரைட் செய்து, அதை சரியாக சீவி பாப் காட் வெட்டி இருக்கிறார். தினமும் அதற்கு எண்ணெய் தேய்த்து சரியாக பராமரித்து வருகிறார் ராஜகோபாலன். அதன்பின்தான் சாதாரண செங்கமலம்.. பாப் கட் செங்கமலம் ஆனது.

சிறப்பு ஏற்பாடுஇது மிகவும் சாந்தமான யானை ஆகும். சத்தமாக கூட இந்த யானை பிளிறியது கிடையாது. புத்துணர்வு முகாம்களில் மிகவும் ஆக்டிவ் மற்றும் செல்லம் என்று கூறுகிறார்கள். அதோடு இந்த யானைக்கு மன்னார்குடி ராஜகோபாலன் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கோவிலுக்கு உள்ளேயே இவருக்கு ஷவர் வைத்து குளிக்க ஏற்பாடு செய்து உள்ளனர்.

சுத்தமான யானைஇந்த யானை தினமும் இரண்டு வேளை குளிக்கும். ஆம் அந்த அளவிற்கு சுத்தம். அதிலும் ஷாம்பு இல்லாமல் குளிக்காது. சுமார் 1 மணி நேரம் தண்ணீரில் ஆட்டம் போடும் என்று கூறுகிறார்கள். இதற்கு தலைமுடியை பராமரிக்க தனியாக மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. தனியாக செலவு செய்யப்படுகிறது. இதை பார்க்க இப்போதெல்லாம் வெளிநாட்டில் இருந்து கூட மக்கள் வருகிறார்கள்.

என்ன பின்புலம்இந்த யானையின் சுபாவம் ஆச்சர்யம் தருகிறது என்று விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த யானை மமூத் வகை யானையின் ஒரு வகையாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது பழைய ஆதிகால யானை வகை ஆகும். மமூத் வகை யானைகள்தான் அதிக முடியை கொண்டு இருக்கும். மற்ற யானைகளுக்கு முடிகள் எளிதாக விழுந்துவிடும்அல்லது யானையே முடியை பிய்த்துக் கொள்ளும். ஆனால் செங்கமலத்திற்கு அப்படி முடிகள் கொட்டுவது இல்லை.சில யானைகள்இதனால் மமூத் வகை யானையின் வகையாக இது இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் மமூத் வகை யானைகள் மிகவும் கோபமானது. மாறாக செங்கமலம் மிகவும் சாந்தமானது. இதனால் இது மமூத் வகையின் பரிணாம வளர்ச்சி யானையாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த யானையை எப்போதும் அதன் பாகம் கட்டிபோட்டதே இல்லை. அதுபாட்டுக்கு தனக்கு பிடித்தபடி கோவிலுக்கு விளையாடும், சுற்றி வரும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button