தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நடிகை மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிய காமெடிநடிகர் சூரி

advertisement by google

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் முக்கியமான ஒருவர் சூரி.

advertisement by google

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான இவர் தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார். இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் அடைந்தார். முன்னணி காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

advertisement by google

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். சமீபத்தில் கூட அதன் ஒரு கிளையின் திறப்பு விழாவிற்கு சிவகார்த்திகேயன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஆச்சரியமாக நடிகை மீனாவின் வீட்டை சூரி விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

advertisement by google

நடிகை மீனாவுக்கு சொந்தமான வீடு ஒன்றை விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததை அறிந்த பலர் அந்த வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் அனைவரையும் முந்திக்கொண்டு நடிகர் சூரி இந்த வீட்டை  ரூ. 6.5 கோடிக்கு வாங்கியுள்ளாராம். சினிமாவில் நுழைந்த ஒரு சில வருடத்திலே நடிகை மீனாவின் வீட்டை வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ள சூரியின் வளர்ச்சியை கண்டு கோலிவுட் ஆச்சரியத்தில் வாயைப்பிளந்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button