இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

வனவிலங்குகளை வேட்டையாடியா கும்பல் கைது?கேரளாவில் பரபரப்பு ? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கேரளாவில் வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது!

advertisement by google

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8 வயது யானை கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

advertisement by google

கேரளாவில் வன விலங்குகளின் மாமிசத்திற்காகவும், அவற்றின் உடல் உறுப்புகளுக்காகவும் அவற்றை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதற்காக பல நூதன முறைகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அன்னாசி பழத்திற்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்து உணவாக கொடுப்பதன் மூலம் அவற்றை கொல்லும் கொடூர முறையும் இவற்றில் ஒன்றே. அண்மையில் பாலக்காடு மாவட்டத்தில் இது போன்ற முறையில் கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

advertisement by google

இச்சம்பவத்திற்கு பிறகு வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் பிரச்சாரமும் தீவிரமடைந்தது. 

advertisement by google

புனலூர் காட்டுப்பகுதியில் செம்பனருவி அருகே கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று, 8 வயது யானை ஒன்று வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தினை உண்டதால், அதன் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், தாடை பகுதி சிதைந்தது உயிரிழந்தது.

advertisement by google

இந்த யானை கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை வனத்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவனது வீட்டில் சோதனையிட்ட போது வனவிலங்கின் மாமிசம், எலும்புக்கூடுகள் மற்றும் மலைப்பாம்பின் உடல் போன்றவை கைப்பற்றப்பட்டது.

advertisement by google

இவர்கள் வனவிலங்குகளின் மாமிசத்தை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து யாரெல்லாம் மாமிசம் வாங்கிச் சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button