உலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

தொற்றே இல்லாத நாடாக நியூஸிலாந்து உருவெடுத்துள்ளது?அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிசயம்.. ஆச்சரியம்.. உண்மை..

advertisement by google

தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்துள்ளளது நியூஸிலாந்து.

advertisement by google

இதற்கெல்லாம் காரணம் சாட்சாத் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தான்..

advertisement by google

உலக நாடுகளே ஜெசிந்தாவை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றன.

advertisement by google

இந்த அற்புதமான செய்தி நியூசிலாந்து நாட்டின் சாதனை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவிக்கிறார்,.

advertisement by google

கடந்த பிப்ரவரி 28 க்குப் பிறகு எங்கள் நாட்டில் பெரிய அளவிலான தொற்று பாதிப்பு இல்லை.. இதுவே எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாகும்.. ஆனால் நாங்கள் ஏற்கனவே சொன்னது போல இந்த கோவிட்-19 க்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு தொடர்ந்து அவசியம்” என்று ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

advertisement by google

துவக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸை கையாண்ட விதத்திற்காக நியூசிலாந்து பல்வேறு நாடுகளின் பாராட்டை பெற்று வருகிறது..

advertisement by google

குறிப்பாக பிரதமர் ஜெசிந்தாவின் செயல்பாடுகள் பாராட்டுக்களைப் பெற்றன.

7 வாரங்கள் லாக்டவுன் போடப்பட்டது.. இந்த லாக்டவுன்கூட கடந்த மாதம்தான் தளர்த்தப்பட்டது.. இதுவரை 1,154 பேருக்கு பாதிப்புகளும், 22 உயிரிழப்புகளையும் நியூசிலாந்து சந்தித்துள்ளது.. ஆனால் 17 நாட்களுக்கு புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்பது பெரிய விஷயம்.

தொற்றில் இருந்த கடைசி நபரும் மீட்கப்பட்டுவிட்டார்.. இதை முறைப்படி பிரதமர் இன்று அறிவிக்கவுள்ளார். அநேகமாக பிரதமர் ஜசிந்தா தளர்வு குறித்த அறிவிப்புகளை விரைவில் எடுப்பார் என நம்பப்படுகிறது.. அதன்படி, சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.. ஆனால் இறுதி உள்நாட்டு கட்டுப்பாடுகள் – பொதுக் கூட்டங்கள் மீதான வரம்புகள் மற்றும் கட்டாய சமூக விலகல் போன்றவை தளர்த்தப்படும் என தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்தே வியக்க வைத்து வருகிறார் பிரதமர் ஜெசிந்தா.. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதிபர் டிரம்ப் இந்த வைரஸ் பற்றி அத்தனை அலட்சியம் காட்டினார்.. பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் “என்னை யாராவது சந்திக்க வந்தால் கை கொடுப்பேன்ஞ என்று கெத்தாக பேசினார்.. கடைசியில் இதே தொற்று பாதித்து ஐசியூவரை சென்று வந்தார்.. இப்படி பெரிய பெரிய நாட்டு அதிபர்களும், பிரதமர்களுமே கொரோனாவில் அலட்சியம் காட்டி வந்த நிலையில் ஜெசிந்தாவின் தடுப்பு நடவடிக்கைகள் உலக மக்களால் கவனிக்கப்பட்டது.நியூசிலாந்தை பொறுத்தவரை அது முழுக்க முழுக்க சுற்றுலா நாடு.. சுற்றுலாவில்தான் முக்கிய வருவாயை ஆதாரமாக கொண்ட நாடு.. ஆனாலும், வைரஸ் பரவுகிறது என்று தெரிந்ததுமே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைய தடை போட்டுவிட்டார். அதனால்தான் ஆரம்பத்திலேயே அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.. நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறு தாண்டியதுமே 1 மாத ஊரடங்கை முதலில் அறிவித்தார் ஜெசிந்தா..தன் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு தந்து கொண்டே இருந்தார்.. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்தவருக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்’ என்ற ஜெசிந்தாவின் வேண்டுகோளை மக்கள் அப்படியே ஏற்றனர்.. பின்பற்றினர்! இப்போது உலக நாடுகளுக்கு ஜெசிந்தா ஒரு உதாரணமாக திகழ்கிறார்!அலட்சியப்படுத்திய மாபெரும் தலைவர்கள் மத்தியில் கொரோனாவை தைரியமாக எதிர்கொண்டு பல நாட்கள் கட்டுக்குள் வைத்திருந்து, இன்று தொற்றே இல்லாத “ஜீரோ” நிலையை கொண்டு வந்துள்ளார் ஜெசிந்தா! சபாஷ் மேடம்..!

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button