இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

உலகநாடுகளில் ஒருநாள் பாதிப்பில்3 – வது இடத்தில் இந்தியா -24 மணிநேரத்தில் 10,864 பேருக்கு கொரோனா?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

உலக நாடுகளில் ஒரு நாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா- 24 மணிநேரத்தில் 10,864 பேருக்கு கொரோனா.

advertisement by google

டெல்லி: ஒரே நாளில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

advertisement by google

உலக நாடுகளில் கொரோனாவால் மொத்தம் 70,85,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,05,272 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
உலக நாடுகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 18,905 பேர் பாதிக்கப்பட்டும் 373 பேர் உயிரிழந்தும் போயினர். அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 20,07,449 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,12,469 ஆகவும் இருக்கிறது.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் ஒரே நாளில் 18,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பிரேசிலில் ஒரே நாளில் 542 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இங்கு கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்து 36,499 ஆக உள்ளது.

advertisement by google

ஒரே நாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 10,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 261 பேர் மாண்டும் போயுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2,57,486 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 7,207 ஆகவும் இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா உறுதியானது.

advertisement by google

ரஷ்யாவை தொடர்ந்து ஒரே நாளில் சிலியில் 6,405; பாகிஸ்தானில் 4,960; மெக்சிகோவில் 3,593; சவுதி அரேபியாவில் 3,045 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஈரானிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஈரானில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா உறுதியானது. வங்கதேசத்தில் ஒரேநாளில் 2,743, தென்னாப்பிரிக்காவில் 2,312 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button