இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கொரோனா சிகிச்சைக்காக பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கொரோனா சிகிச்சைக்காக பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் – கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு

advertisement by google

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கோவில்பட்டி நகரத்தில் நாதஸ்வர கலைஞர்கள் உட்பட 500 குடும்பங்களுக்கும், கோவில்பட்டி ஒன்றியம் லிங்கம்பட்டியில் 200 குடும்பங்களுக்கும், கயத்தாறு மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வானரம்பட்டி, செட்டிகுறிச்சி, ஆத்திகுளம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு அரிசி, மற்றும் பருப்பு, கடம்பூர் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள், கோவில் பூசாரிகளுக்கு நிதியுதவி மற்றும் முடி திருத்துவோர்க்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் என, மொத்தம் 400 பேருக்கு நிவாரண உதவிகளை திமுக மகளிரணி செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், முன்னாள் நகர செயலாளர் ராமர், திமுக நிர்வாகி ராமனுஜம்கணேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

இதனை தொடர்;ந்து கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் பேசுகையில் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கக்கூடிய திட்டத்தை இந்த அரசாங்கம் தான் சொந்த ஆதாயம் பெறுவதற்காக எட்டு வழி சாலையை கொண்டுவருவதில் மிக மும்முரமாக இருக்கிறார்கள், எட்டு வழிச்சாலை எதிர்த்து பல போராட்டங்கள், எதிர்ப்புகளை பார்த்தாச்சு, இதற்குப் பிறகும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் போராட வரமுடியாத காலகட்டத்தில் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றுவது என்பது மக்களுக்கு விரோதமான மிக மோசமான முன் முன்னெடுப்பு இதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்,அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது மக்கள் திரண்டு வந்து போராடுவார்கள். இதனால் இன்னும் அதிகமாக கொரோனா தொற்று பரவ இதுவும் காரணமாக இருக்கும்,இத்தனை தவறுகள் செய்து விட்ட பிறகும் எட்டு வழி சாலை திட்டத்தை தொடர்வோம் என்று சொல்லு மனசு அரசாங்கத்திற்கு எப்படி இருக்கும் என்பது புரியவில்லை,மத்திய மாநில அரசுகள் மக்கள், விவசாயிகள் .மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தான் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் பொருளாதாரத்தை சீர்படுத்த கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை,தொழிற்சாலை நிறுவனங்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் என யாருக்கும் மகிழ்ச்சியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய எவ்வித திட்டங்களையும் இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதுதான் உண்மை,தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் வராமல் இருப்பதற்கான அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரூ 7500 முதல் 22 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆனால் பல தனியார் மருத்துவமனைகளில் அதை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழக அரசு ஒரு அறிவிப்பை செய்துவிட்டு நிறுத்துவதோடு அரசாங்கத்தின் கடமை முடியவில்லை.அது நிறைவேற்ற படுகிறதா என்பதை பார்க்க வேண்டியதுதான் அரசின் கடமை.பல பேர் இரண்டு, மூன்று நாள் சிகிச்சை பெற்றவர்கள் கூட லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றர்கள்,அரசிடம் போதுமான படுக்கை வசதி ஏதுமில்லை,ஆகையால்தான் தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்,இந்த அளவுக்கு கட்டணம் வசூலிப்பதை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்க கூடாது என்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button