தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு “காந்தி150விருதுகள்”
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ” காந்தி 150 விருதுகள்”
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16.10.2019 அன்று நடந்த மாநில அளவிலான ” GANDHI 150 AWARDS “என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் & நிர்வாகத்தினர் பங்குபெற்று பரிசு கோப்பைகள் & சான்றிதழ்கள் பெற்றனர்..
” காந்தி 150 விருது ” என்னும் மாநில அளவினான விருது வழங்கும் நிகழ்ச்சியில் திரு.வெ.பொன்ராஜ் அவர்கள் , முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் மற்றும் திரு. சைதை.சா. துரைசாமி அவர்கள்,
மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் & தலைவர், சென்னை முன்னாள் மேயர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் , கேடயம் மற்றும் விருது வழங்கி வாழ்த்தினார்கள்…
கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் வ. ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினர்.
முனைவர்.v.தியாகராசு , முதல்வர் அவர்கள் தலைமை வகித்தார்.
திரு. தரணிதரன் மற்றும் கருப்பண்ணன் கல்லூரி செயலர் மற்றும் ஆட்சிகுழு தலைவர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு செயலாளர் திரு.ச.மகேந்திரன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் & தலைவர் திரு.சு.ராஜ்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்..
மாநில அளவில் நடைபெற்ற போட்டித்தேர்வில் ஈரோடு மாவட்டம் வேளாளர் கல்லூரியை சேர்ந்த v.திவ்யதர்ஷனா முதலிடம் பெற்றார்.
திருச்சி மாவட்டம் காவேரி கல்லூரியை சேந்த k.தேவிகா இரண்டாம் இடம் பெற்றார்.
நாமக்கல் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த m. இந்துமதி மூன்றாவது இடம் பெற்றார்.
ஈரோடு மாவட்டம் கோபி கலை கல்லூரியை சேர்ந்த ராஜலட்சுமணன் நான்காம் இடம் பெற்றார்.
இதுதவிர பல்வேறு மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த கல்லூரிகளுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.
மாநில அளவில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு விருது கொடுத்த பின் திரு.சைதை.சா.துரைசாமி அவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு மாணவ மாணவிகள் எவ்வாறு தங்களை தயார் செய்வது மற்றும் வாழ்வியல் முறை பற்றி சிறப்பாக மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.
பிறகு எழுச்சியுரை ஆற்றிய திரு.வெ.பொன்ராஜ் அவர்கள் கலாம் ஐயா பற்றியும் தன்னம்பிக்கை உரையாற்றியும் மாணவ மாணவிகளை ஊக்குவித்தார்கள்..
மாபெரும் உலத சாதனை செய்த தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாக குழு கூறுகையில் :
இது போன்ற பல்வேறு போட்டிதேர்வுகள் ஆண்டு தோறும் இனி மாநில அளவில் நடத்தப்படும்…
அதற்கான வாய்ப்புகள் மற்றும் ஊக்கம் அனைத்து கல்லூரி சார்பாக வழங்கப்பட வேண்டும். மாணவ மாணவிகளின் தனிதிறமைக்குளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
இந்த ஆண்டு போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
எங்களது அழைப்பை ஏற்று வந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை வெற்றி கரமாக நடத்த உதவிய தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் நிர்வாக குழு& தலைமை ஆலோசகர்கள் அனைவரும் நன்றிகள்..