இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகஅரசு குடும்பத்திற்குரூ5ஆயிரம் வழங்க வேண்டும்?திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

தமிழக அரசு குடும்பத்திற்கு ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

advertisement by google

 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,515  பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,667  ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 8வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 5,92,970 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மாவட்ட ரீதியான பரிசோதனை எண்ணிக்கையை அரசு சார்பில் வெளியாகாத நிலையில் இன்று மாவட்ட அளவிலான பரிசோதனை விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 
 

advertisement by google

 
மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் 16,275 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,92,970 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை எவ்வளவு என வெளியிடப்படாமல் இருந்த நிலையில், இன்று மாவட்ட ரீதியிலான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  
 

advertisement by google

 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் 6வது முறையாக உயிரிழப்பு இரட்டை விகிதத்தில் பதிவாகியுள்ளது. 
 

advertisement by google

 
சென்னையில் மட்டும் இன்று 1,156 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்திற்கு ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பதிவில், “வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என முதல்வர் ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும். தேவையானவற்றை அரசே வழங்கி, அரண் எழுப்பித் தடுத்தால்தான் மக்களைக் காக்க முடியும். இப்போது தேவை சொல் அல்ல; செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button