இந்தியாஉலக செய்திகள்தொழில்நுட்பம்

ரஜினிக்கு கொடுக்கப்பட்ட விருது ஏன் கமலுக்கு தரப்படவில்லை ?

advertisement by google

ரஜினிக்கு கொடுக்கப்பட்ட விருது ஏன் கமலுக்குக் கொடுக்கப் படவில்லை???

advertisement by google

தேசிய விருதில் ஆரம்பித்து,
ஆஸ்கர் விருது நோபல் பரிசு வரை எப்படி கொடுக்கப்படுகிறது என்று சற்று ஆராய்ந்தால் தெரியும் ஏன் கொடுக்கப்படவில்லை என்று…

advertisement by google

ஆஸ்கராக இருக்கட்டும் நோபல் ஆக இருக்கட்டும் அதில் திறமை தவிர வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளது. அதில் முக்கியமான காரணம் PR ஸ்கில்ஸ் அதாவது தனிப்பட்ட முறையில் அந்த குழுவிடம் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பது..

advertisement by google

விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளுக்கு அர்ஜுனா அவார்டு என்று சொல்லப்படும் விருதை யார் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்…???

advertisement by google

அதை வாங்க வேண்டுமென்றால் அதற்கு அப்ளை செய்ய வேண்டும்.. அதாவது அந்த வீரரே விருது வேண்டும் என்று கேட்க வேண்டும்.. இது அந்த விருதுக்கு மட்டுமின்றி பத்மா விருது முதல் பல விருதுகளுக்கும் அப்படித் தான்..

advertisement by google

ஆஸ்கார்(சினிமா- அமெரிக்கா), நோபல் (பொருளாதாரம், அறிவியல்), ரஜினிக்கு கிடைத்த IIFI வாழ்நாள் சாதனையாளர் போன்ற மிகப் பெரிய விருதுகளை ஒரு கமிட்டி தான் முடிவு செய்யும்.. அந்தக் கமிட்டி பல விதங்களைப் பார்க்கும்..

advertisement by google

சினிமா என்பது ஒரு வியாபாரம் அதில் திறமையும் முக்கியம், வியாபாரமும் முக்கியம்.. வெறும் திறமை மட்டுமே முக்கியம் என்றால் எல்லா விருதுகளும் திறமையில் கமலுக்கு அப்பன்களாக விளங்கும் நானா படேக்கர், நஸ்ருதீன் ஷா, நம்ம ஊர் டெல்லி கணேஷ், நாசர் போன்றவர்களே வாங்கிச் செல்வார்கள்..

advertisement by google

ஆனால் அவர்களால் திறமையாக நடிக்க முடியுமே தவிர ஒரு படத்தை லாபகரமாக எடுத்துச் செல்லும் திறன் கிடையாது.. இது வருத்தமாக இருந்தாலும் கமல் அம்மாதிரி லாபகரமாக எடுத்துச் செல்லும் வழியை விட்டு விலகி பல வருடங்கள் ஆகி விட்டன..

அப்படிப் பார்த்தால் கமல் வாங்கிய அளவு தேசிய விருதுகள், பத்மா விருது, பிலிம் ஃபேர் விருதுகள் தமிழ் சினிமாவில் யாரும் வாங்கியதேயில்லை..

2014 இல் அவருக்கு பத்மபூஷன் கொடுத்ததும் அந்த அங்கீகாரத்தில் தான்.. ஆனால், பத்மா, அர்ஜுனா, தேசிய விருதுகளுக்கு சற்றே மேலே இருக்கும் விருதுகளுக்குத் திறமை மட்டும் போதாது அதற்கு மேலே கொஞ்சம் செய்ய வேண்டும்

சினிமா என்பது ஒரு கம்பெனியாக இருந்தால் கண்டிப்பாக ரஜினி அதில் ப்ராண்ட்..
கமல் அதில் CEO ..
CEO க்கள் முக்கியம் தான் ஆனால் CEO க்கள் மாறினாலும் பிராண்ட் இல்லாவிடில் கம்பெனி நிக்காது..

ஸ்டீவ் ஜாப்ஸ் பெருசா apple பெருசான்னு கேட்டால், ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த பின்னும் apple முதல் நிறுவனமாக இருப்பதன் காரணம் அதன் Brand ,ஆக பிராண்டே பெரிது., அதுவே ரஜினி.. தேர்வுக் குழு அதற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்..

சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த பாரத ரத்னா ஏன் கபில்தேவ், கங்குலி, திராவிடுக்கு கிடைக்கவில்லை?

சச்சின் கிரிக்கெட் மட்டுமே விளையாடவில்லை, அதற்கும் மேல் இந்திய நாட்டின் ஒருமைப்பாடத்தில் 22 வருடங்களுக்கு மிகப்பெரிய பங்கு வகித்தார்.. அதுவே காரணம் .

அதுபோல் இந்திய முக்கியமாக தென்னிந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு எடுத்து சென்றது ரஜினி மட்டுமே…
மற்றவர்கள் அதை முயற்சித்தார்கள்.. முயற்சிப்பவர்களுக்கும் வெல்பவர்களுக்கும் ஒரு நூலளவேனும் வித்தியாசம் இருந்தால் மட்டுமே மற்றவர்களை ஊக்குவிக்கும் என்பதே குழுவில் கணிப்பு..

“நீங்க ஒரு படம் பாக்குறீங்க.. எப்படி பாப்பீங்க? உங்க நண்பர்கள் கிட்ட நல்ல படங்கள் எது வந்துருக்குனு கேப்பீங்க., அவங்க ஒரு 5 அல்லது 6 படம் சொல்லுவாங்க, அதிலிருந்து ஒண்ண எடுத்து பாப்பீங்க இல்லியா? அந்த நண்பர்கள் சில படங்கள சொல்லாம விட்டுட்டாங்கன்னா உங்க மேல எப்படி தப்பாகும்..

இதே போலத் தான் ஆஸ்கார் குழுவும் வேலை செய்யுது” – இது ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிய போது .,’ஏன் இளையராஜாவுக்கு தரவில்லை’னு பத்திரிகையாளர்கள் கேட்ட போது சொன்ன பதில்..

அவர் சொன்ன உதாரணத்தில் அந்த நண்பர்கள் மத்தியில் நாம் எப்படி தாக்கம் செய்கிறோம் என்பதே முக்கியம்.. அது என்ன என்று கமல் தான் புரிந்து கொள்ள வேண்டும்..

advertisement by google

Related Articles

Back to top button