இந்தியா

மாட்டுவண்டிக்கு அபதாரம் விதித்த காவலர்

advertisement by google

advertisement by google

புதிய மோட்டார் வாகன சட்டம்: மாட்டுவண்டிக்கு அபராதம் விதித்த காவலர்!

advertisement by google

விவசாயியின் மாட்டு வண்டிக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!
மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

advertisement by google

இந்நிலையில், இதையடுத்து உத்தரகாண்டில் சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். இவர் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை வயலுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பங்கஜ் குமார் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மாட்டுவண்டியை பார்த்ததும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டனர்.
அக்கம்பக்கத்தில் விசாரிக்கையில் அது ரியாஸ் என்பவருடையது என கண்டறியப்பட்டது.

advertisement by google

இதையடுத்து வண்டியினை அவரது வீட்டுக்கு கொண்டுச் சென்று ரியாசிடம் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ரசீதை கொடுத்துவிட்டனர். இதனால் ரியாஸ் அதிர்ச்சிக்குள்ளானார். இது குறித்து அவர் கூறுகையில், ‘வண்டியை என் வயலுக்கு வெளியில்தான் நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது என தெரியவில்லை.

advertisement by google

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டுவண்டி வராதபோது அதற்கு ஏன் அபராதம்? என குழம்பினேன். பின்னர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விசாரித்தேன். அப்போது அவர்கள் மணல் கடத்தும் மாட்டு வண்டிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் நினைத்ததாகவும், பில் புக் மாறியதாலும் தவறு நடந்துவிட்டதாகக் கூறி ரசீதை கேன்சல் செய்தனர்’ என கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button