இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

இந்தியா,சீனா எல்லை பிரச்சனையை சமரச பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்வதாக ,அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், உலக மக்களின் கேலியும் கிண்டலும்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பிரச்னையை சரி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ள நிலையில்,

advertisement by google

பழைய விஷயம் ஒன்றை நினைவு கூர்ந்து பலரும் அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து வருகிறார்கள்.

advertisement by google

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வலுக்க தொடங்கி உள்ளது.

advertisement by google

சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

advertisement by google

முக்கியமாக லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

advertisement by google

முக்கியமாக லடாக்கில் இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது.

advertisement by google

உலக அளவில் இந்த இரண்டு நாட்டு பிரச்சனை பெரிய அளவில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.

advertisement by google

மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் தடையாக உள்ளார்..அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார்!

டிரம்ப் என்ன கூறினார்இந்த நிலையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தாயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பலர் கிண்டல்இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பிரச்னையை சரி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ள நிலையில், பழைய விஷயம் ஒன்றை நினைவு கூர்ந்து பலரும் அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் குறித்தும், அவரின் மன நிலை குறித்தும்என்ற புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதில் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு இருந்தார்.

எல்லை இருப்பது தெரியாதுபுத்தகத்தை இரண்டு புலிஸ்டர் விருது பெற்ற எழுத்தாளர்கள் பிலிப் ருக்கார் மற்றும் கரோல் லியோனின் ஆகியோர் எழுதி இருந்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தாவது, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்தியா – சீனா இடையே எல்லை இருப்பது தெரியாது. இந்தியாவும் சீனாவும் அருகருகே இருக்கிறது என்பது கூட அவருக்கு தெரியாது. இதை அவர் மோடியிடம் சொல்லி இருக்கிறார்.சந்தித்துக் கொண்டனர்இரண்டு பேரும் சந்தித்துக் கொண்ட போது டிரம்ப் இதை மோடியிடம் கூறியுள்ளார். டிரம்ப் பேச்சை கேட்டு மோடி அதிர்ச்சி அடைந்துள்ளார். இவருடன் எப்படி சீனா குறித்து பேசுவது, இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று மோடி தனது உதவியாளரிடம் கூறியதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த புத்தகம் தற்போது இணையம் முழுக்க மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.வைரல்இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே எல்லை உள்ளது, அருகருகே இரண்டு நாடுகளும் உள்ளது என்று கூட தெரியாமல் இருக்கும் அதிபர்தான் இரண்டு நாட்டு பிரச்சனையை தீர்க்க போகிறாரா. இவருக்கு இரண்டு நாட்டு பிரச்சனை குறித்து என்ன தெரியும் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏற்கனவே இப்படித்தான் டிரம்ப் இந்தியா பாகிஸ்தான் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார்.பாகிஸ்தான் பிரச்சனைஆனால் அப்போது அவரை மத்திய அரசு கடுமையாக எதிர்த்து. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை இரண்டு நாட்டு பிரச்சனை. இதில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தியா பதில் அளித்தது. இதனால் டிரம்ப் அமைதியானார். தற்போது மீண்டும் அவர் இந்தியா சீனா பிரச்சனையில் மூக்கை நுழைக்க முயன்று வருவது பெரிய விவாதம் ஆகியுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button