தொழில்நுட்பம்

இரண்டாக மடிக்க கூடிய போல்ட் மாடல் மொபைல் அறிமுகம்? டச் மொபைலுக்கு குட்பை ?

advertisement by google

டச் மொபைலுக்கு குட்பை – ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி

advertisement by google

சாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டாக மடிக்கக்கூடிய ஃபோல்டு மாடல் மொபைல்லை வெளியிட்டது. இந்த மொபைல்லானது 12 ஜிபி ரேம், 73 இன்ச் நீளம், 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியுடன் வெளியானது. மேலும் இந்த மொபைலில் 16 எம்பியில் ஒரு கேமராவும், 12 எம்பியில் இரண்டு கேமரா என மூன்று கேமரா பொறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் 10 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

advertisement by google

ஃபோல்ட் மாடல் மொபைல்லை அறிமுகம் செய்த சாம்சங்
சாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டாக மடிக்கக்கூடிய ஃபோல்டு மாடல் மொபைல்லை வெளியிட்டது. இந்த மொபைல்லானது 12 ஜிபி ரேம், 73 இன்ச் நீளம், 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியுடன் வெளியானது. மேலும் இந்த மொபைலில் 16 எம்பியில் ஒரு கேமராவும், 12 எம்பியில் இரண்டு கேமரா என மூன்று கேமரா பொறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் 10 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

advertisement by google

அரை மணி நேரத்தில் விற்றுத்தீர்த்த மொபைல்கள்
இந்த மொபைலின் விலை ரூ. 1,64,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் முதற்கட்டமாக 1600 மொபைல்களை சாம்சங் விற்பனைக்கு வெளியிட்டது. வெளியிட்ட அரை மணிநேரத்தில் அனைத்து மொபைல்களும் விற்று முடித்துவிட்டது. ஃபோல்டு மாடல் மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்த சாம்சங் அடுத்தக்கட்ட விற்பனையை வருகிற டிசம்பர் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

‘சந்திரயான் 3’ விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா?

advertisement by google

ஹூவாய் அறிமுகம் செய்த ஃபோல்ட் மாடல் மொபைல்
அதேசமயத்தில் ஹூவாய் நிறுவனம் ஃபோல்டு மாடல் அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்தது. இந்த மாடல் போனானது, முதலில் வருகிற 15 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேட் எக்ஸ் 5ஜி என்ற தலைப்புடன் விற்பனைக்கு வரவுள்ள இந்த போனில் 6.6 இன்ச் முன்பக்க டிஸ்பிளே, 6.38 இன்ச் ரியர் கேமராப்புற டிஸ்பிளே வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனை ஒரு லட்சம் முறை மடித்துக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதில் 5ஜி இணையதள சேவை, 8 ஜிபி ரேம், 512 ஜிபி சேமிப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 எம்பி வொய்ட் சென்சார், 16 எம் அல்ட்ரா சென்சார், 8 எம்பி டெலிப்புகைப்பட லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் விலையானது ரூ.1,70,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

களத்தில் இறங்கிய சியோமி நிறுவனம்
சியோமி நிறுவனம் பல்வேறு பிரத்யேக வசதிகளுடன் ஃபோல்டு மாடல் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனானது 5 பாப்-அப் கேமராக்களுடன் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த 5 கேமராக்களையும் பிரைமரியாகவும், செல்பி கேமராகவும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மொபைலுக்கான காப்புரிமைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button