உலக செய்திகள்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

ரேபிட் டெஸ்ட் கிட் என்றால் என்ன?கேள்விக்கு ?பதில் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நீங்கள் அவசியமாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

advertisement by google

கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ரேபிட் கிட் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் இந்த முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1 லட்சம் ரேபிட் கிட்களை ஆர்டர் செய்துள்ளது தமிழக அரசு. இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை துள்ளியமாகவும் விரைவாகவும் கண்டறியமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

advertisement by google

ரேபிட் கிட் என்றால் என்ன?
கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படுத்தப்படும் சிறிய கருவிக்கு பெயர் ரேபிட் கிட். இந்த பரிசோதனையின் உண்மையான பெயர் இம்யூனோகுரோமோட்டோகிராபி. இந்த முறையில் பரிசோதனை செய்வதற்கு சிறு துளி ரத்தம் மட்டும் போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

advertisement by google

எப்படி வேலை செய்கிறது ரேபிட் கிட்?

advertisement by google

இந்த ரேபிட் கிட்-ல் ஏற்கனவே கரோனா வைரஸின் ஆண்டிஜன் வைக்கப்பட்டிருக்கும். அந்த கருவியில் ஒருவருடைய ரத்தம் மற்றும் பப்பர் எனப்படும் ரசாயனத்தை இடும்போது, கரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதனை நிறம் மாறுதலை வைத்து கண்டரியலாம். மேலும், கரோனா தொற்று உறுதியாகி இருந்தால், எவ்வளவு நாட்களுக்கு முன் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் இந்த ரேபிட் பரிசோதனை கிட்டின் மூலம் கண்டறியமுடியும்.

advertisement by google

ரேபிட் கிட்-ஐ வைத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், 30 நிமிடங்களுக்குள்ளாகவே முடிவு தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

advertisement by google

தற்போது நடைமுறையில் உள்ள பரிசோதனைக்கும் ரேபிட் கிட்டிற்கும் என்ன வித்தியாசம்?

advertisement by google

தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் முறையில், தொண்டைச்சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை தனியாக பிரித்தெடுத்து பின்னர் வைரஸ் கிருமிகளை மட்டும் மற்றொரு கருவியில் வைத்து பரிசோதனை செய்து கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால், ரேபிட் கருவியில் அதுபோன்று இல்லை.

advertisement by google

Related Articles

Back to top button