இந்தியா

இரு சக்கர வாகணத்தை நடுரோட்டில் எரித்த வாலிபர் , டில்லியில் பரபரப்பு சம்ப வமாக மாறின

advertisement by google

11 ஆயிரம் அபராதம் எதிரொலி-வாகனத்தை நடுரோட்டிலேயே தீ வைத்து எரித்த இளைஞர்

advertisement by google

நாடு முழுவதும் கடந்த 1ந்தேதி (செப்டம்பர் 1, 2019) முதல் விதி மீறலில் ஈடுபடும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகள் மீதான அபராதத் தொகை  பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

advertisement by google

இந்த நிலையில், சம்பவத்தன்று டில்லியில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை மடக்கிய போக்குவரத்து காவல்துறையினர், அவருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

advertisement by google

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தனது வாகனத்தை நடு ரோட்டிலேயே தீ வைத்து எரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

நாடு முழுவதும்  புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

போக்குவரத்து காவல்துறையினர் விதிகள் மீறும் வாகன ஓட்டிகளை ஓடி ஓடிச் சென்று மடக்கி, வசூல் செய்து வருகின்றனர்.

advertisement by google

இந்த நிலையில் டில்லி இருச்சக்கரம் வாகனம் ஓட்டி வந்த ராகேஷ் என்பவரை போக்குவரத்து காவல்துறையினர் மடக்கினர்.

advertisement by google

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் குடித்திருந்தது தெரிய வந்ததால், அவருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் போலீசாருடன் கடுமையாக வாக்குவாதம் செய்த நபர், தனது வாகனத்தை போலீசார் முன்னிலையே நடு சாலையில் தீ வைத்துக் கொளுத்தினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடடினயாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button