கல்வி

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் சுரக்காய்? சுரைக்காய் குடுவை சிறப்பு சொற்பொழிவு?திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையில் சுரக்காய் குடுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு யோகா ஆசிரியர் விஜயகுமார் சுரைக்காய் குடுவை குறித்து உரை?✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?

advertisement by google

சுரைக்காய் குடுவை சிறப்பு சொற்பொழிவு

advertisement by google

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையில் சுரக்காய் குழுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது யோகா ஆசிரியர் விஜயகுமார் சுரைக்காய் குடுவை குறித்து பேசுகையில்,
சுரைக்காய் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் காய்களில் குறிப்பிடத்தக்கது. இக்காய் இளம்பருவத்தில் உணவாகவும், முற்றிய பின்பு குடுவைகள், சேமிப்பு கலன்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.
சுரைக்காய் குர்குபிட்டேட்டீஸ் என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சுரைக்காயின் அறிவியல் பெயர் லாகனரியா சைக்கரியா என்பதாகும்.
சுரையின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுரைக்காயை மக்கள் இசைக்கருவிகள், சேமிப்பு கலன்கள், மீன்பிடி மிதவைகள் போன்றவற்றிக்காக பயன்படுத்தியுள்ளனர். பின்னர் உணவுக்காக பயிர் செய்தனர். முதலில் ஆப்பிரிக்காவில் பயிர் செய்யப்பட்டு பின் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இக்காயானது இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளில் காணப்படுகிறது. இனிப்பு வகைக்காயே சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
படர்ந்து வளரும் கொடி வகைத் தாவரத்திலிருந்து சுரைக்காய் பெறப்படுகிறது. வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் இத்தாவரம் வளரும்.இக்கொடியானது நல்ல வடிகால் வசதியுடன் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண்ணில் நன்கு வளரும். பொதுவாக சுரைக் கொடியை வீட்டுக்கூரைகளின் மீதோ, மரங்களின் மீதோ படரவிடுவர். சுரைக்கொடியானது கிளைகளுடன் அடர் பச்சை நிற இலைகளை கொண்டது. வெள்ளைநிறப் பூக்கள் பூக்கின்றன. அதிலிருந்து இளம் பச்சைநிறத் தோலுடன் காய்கள் தோன்றுகின்றன. சுரைக்கொடி பயிர் செய்த, எழுபைந்தைந்து நாட்களில் இளமையான மென்மையான தோலினை உடைய உண்ணக்கூடிய சுரைக்காய்கள் அறுவடைக்குத் தயார் ஆகின்றன.‌உண்ணக்கூடிய சுரைக்காயானது வெளிப்புறத்தில் மென்மையான இளம் பச்சை நிற தோலினைக் கொண்டிருக்கும். அதனுள் பஞ்சு போன்ற சதைப்பகுதியில் விதைகள் புதையுண்டிருக்கும்.
சுரைக்காயை முற்றவிட்டு பின் உள்ளிருக்கும் சதைளோடு கூடிய விதைகள் தோண்டப்பட்டு குடுவைகள், விளக்குகள், அலங்காரப்பொருட்கள் செய்யப்படுகின்றன. முற்றிய சுரைக்காய் கடினமான பழுப்புநிற வெளித்தோலையும், பழுப்பு நிற விதைகளையும் கொண்டிருக்கும். இக்காயானது உருண்டை, குட்டை, நெட்டை என பல வடிவங்களில் காணப்படுகிறது. குடுவை போன்ற தோற்றத்தில் பொதுவாக காணப்படுவதால் குடுவைக்காய் என்று அழைக்கப்படுகிறது. தற்போது குடுவை பயன்பாடு அரிதாகிவிட்டது. முன்பு சுரைக் குடுவை இல்லத்தில் கலன்களாக பயன்பட்டன விபூதிகளையும் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது என்றார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button