பயனுள்ள தகவல்மருத்துவம்

கண்ணாடி மாதிரி முகம் பளபளனு இருக்கணுமா? அப்போ அதை செய்து யூஸ் பண்ணுங்க ?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

? கண்ணாடி மாதிரி முகம் பளபளனு இருக்கணுமா? கொத்தமல்லியும் எலுமிச்சை சாறும் கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க…

advertisement by google

பலர் தங்கள் உடலின் நிறத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள அதிகமாக செலவு செய்து வருகின்றனர். ஆனால் சில ஆரோக்கியமான உணவு முறைகள் மூலமே உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

advertisement by google

நமது தோல்களின் ஆரோக்கியம் என்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதிக மக்கள் தங்கள் தோலின் ஆரோக்கியம் குறித்து யோசிப்பது கூட இல்லை. நம் தோல் இப்போது ஆரோக்கியமற்று இருப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. நமது தோலை பாதிக்கும் பல அக மற்றும் புற காரணிகள் உள்ளன.
​சரும பாதிப்பு

advertisement by google

நாம் பதப்படுத்தப்பட்ட அதிக எண்ணெய்களை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் நமது தோல் அதிகமாக பாதிப்புள்ளாகிறது. இதனால் உங்களை இந்த வகையான உணவுகளை உண்ண கூடாது என கூறினால் அது நடைமுறையில் சாத்தியமாகாது.

advertisement by google

ஏனெனில் உலகில் உள்ள அனைவருமே சுவைக்கு அடிமையானவர்களே. ஆனால் சில ஆரோக்கியமான உணவுகளை நமது உணவுப்பட்டியலில் சேர்த்து கொள்வதன் மூலம் இதை சமன் செய்ய முடியும்.

advertisement by google

​கொத்தமல்லி எலுமிச்சை ஜூஸ்

advertisement by google

கொத்தமல்லி மற்றும் எலுமிச்சையானது உடலுக்கும் தோலுக்கும் நன்மை பயப்பதாகும். கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை இரண்டும் அதிகமாக வைட்டமின் சி சத்துக்களை கொண்டுள்ளது. இவை சக்தி வாய்ந்த ஆகிஸிஜனேற்றிகள் ஆகும். நமது உடலில் சாதரணமாக ஏற்படும் சரும சுருக்கங்களை இவை சரிசெய்கின்றன.

advertisement by google

​எடையும் குறையும்

இவை எடை இழப்பிற்கும் அதிகமாக பயன்படுகின்றன. இவை இரண்டிலும் மேக்ரோபயாடிக் அதிகமாக இருப்பதாக சுகாதார பயிற்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள. இது நமது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. இந்த சுத்திகரிப்பு காரணமாக நம்மால் தெளிவான தோலை பெற முடிகிறது.

இப்போதைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நாம் அதிகப்படியான மாசுக்களை நம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம். இதனால் இந்த கொத்தமல்லி எலுமிச்சை சாறானது நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இதில் உள்ள கலோரின் காரணமாக உடல் எடையும் குறைகிறது.

​கொத்தமல்லி எலுமிச்சை சாறை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

1 கப் கொத்தமல்லி இலைகள்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் தயாராக வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரை விட்டுக்கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் ஒரு ஸ்பூன் உப்புத்தூளை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம். பிறகு நன்கு அரைக்கவும். அரைத்தபிறகு அவற்றை வடிக்கட்டி அருந்தலாம்.

இந்த ஜூஸை தினமும் அருந்துவது மூலம் அதன் பலனை நீங்களே பார்க்கலாம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button