t

கலர்கலரான ரசாயன நிறமி கலந்த 160 கிலோ அப்பளத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்✍️உணவு பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திருநெல்வேலி: ரசாயன நிறமி கலந்த 160 கிலோ அப்பளம் பறிமுதல்

advertisement by google

ரசாயன நிறமி கலந்த 160 கிலோ அப்பளத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

advertisement by google

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர், தூத்துக்குடி மாநகர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, 3 கடைகளில் ரசாயன நிறமிசேர்க்கப்பட்ட 110 கிலோ குடல்அப்பளம், ஸ்டார் அப்பளம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நிறம் சேர்த்த அப்பளங்களை ரீபேக்கிங் செய்து, சில்லறை மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த கடையை ஆய்வு செய்து, 50 கிலோகலர் அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொரு கடையில் கெட்டுப்போன 10 கிலோ பிஸ்கட்கள் பறிமுதல் செய்து, அந்த இடத்திலேயே பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

advertisement by google

பாதுகாப்பற்ற கலர் அப்பளம் விற்பனை செய்த 6 வணிகர்கள் மீது ஏற்கெனவே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தரம் குறைவான அப்பளம் விற்பனை செய்ததற்காக, மாவட்ட வருவாய் அலுவலரிடம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பற்ற நிறமி கலந்த அப்பளத்தை வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.

advertisement by google

பொதுமக்களும் நிறமி கலக்காத அப்பளம் மற்றும் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

advertisement by google

மற்றொரு கடையில் கெட்டுப்போன 10 கிலோ பிஸ்கட்கள் பறிமுதல் செய்து, அந்த இடத்திலேயே பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button