தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முன்னால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், வேறு ஒரு பெண்ணின் கணவரை இரண்டாவது திருமணம் செய்யும், குடும்பபிரச்சனைக்கு வந்த பெண்✍️திடிர் வைரல் பெண் சாமியார், அன்னபூரணி அரசு அம்மா… புத்தாண்டு நிகழ்ச்சிக்குத் தடை விதித்த போலீஸ்!✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

முன்னால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, குடும்பபிரச்சனைக்கு வந்த பெண் ,திடிர் வைரல் பெண் சாமியார், அன்னபூரணி அரசு அம்மா… புத்தாண்டு நிகழ்ச்சிக்குத் தடை விதித்த போலீஸ்!*

advertisement by google

சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் அன்னபூரணி அரசு அம்மா எனும் சாமியார் தான். இவர் தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தி வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், கடந்த 2014-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது வேறு ஒரு பெண்ணின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வெளியான காட்சிகள் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. மேலும் இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனெவே பல தனியார் திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்தியிருப்பதும், 2022 புத்தாண்டு அன்று செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர் ஆசி வழங்க வருவதாக கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.

advertisement by google

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அதிகமாக இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதால், செங்கல்பட்டு தாலுகா போலீஸார் சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மண்டப உரிமையாளர், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ரோஹித் என்பவர் தனது திருமண மண்டபத்திற்கு வந்ததாகவும், புத்தாண்டு அன்று கூட்டம் நடத்த அனுமதி கேட்டதாகவும், அதற்கு தான் பத்தாயிரம் ரூபாய் வாடகை கேட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

advertisement by google

அவர் முன்பணமாக 4 ஆயிரம் ரூபாயை அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட ரோஹித்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் செல்போனை எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

advertisement by google

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது தங்களுக்கு தெரியாது எனவும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவந்த நிலையில் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்தக் கூட்டம் நடத்துவதற்கு காவல் நிலையத்தில் அனுமதி ஏதும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல, வரும் ஜனவரி 1-ம் தேதி வைரல் பெண் சாமியார் அன்னபூரணி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி எதுவும் தங்கள் மண்டபங்களில் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் போலீஸார் மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button