இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவையில் 9வருஷத்துக்கு முன்பு, அப்பாவி பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

9 வருஷத்துக்கு முன்பு, அப்பாவி பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது……

advertisement by google

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் பழனிசாமிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்கி கோவை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்த தம்பதி மாரிமுத்து – அம்மாசை.. இவருக்கு 45 வயது! கணவன் மனைவிக்குள் சொத்து விற்பது தொடர்பாக தகராறு வரவும், 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர்

advertisement by google

இது சம்பந்தமாக ராஜவேல் என்ற வக்கீலை அவரது கோபாலபுரம் ஆபீசில் சந்திக்க சென்றார் அம்மாசை. கடந்த 2011, டிசம்பர் 11ம் தேதி அங்கு சென்றவர் வீடு திரும்பாததால், அம்மாசை மகள், சகுந்தலாதேவி பயந்துபோய், ரத்னபுரி போலீசில் புகார் தந்தார்..

advertisement by google

போலீசாரும் ராஜவேல் ஆபீசில் சென்று பார்த்தபோதுதான், அம்மாசை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

advertisement by google

மோகனாஅந்த கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்தபோதுதான் மோகனா என்ற பெண் சிக்கினார்.

advertisement by google

மோகனாவுக்கு 47 வயது. ராஜவேல் மனைவிதான் மோகனா.. இவரும் வக்கீல்.. ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி, அங்கு மோசடி செய்தவர்.. அது சம்பந்தமாக போலீசாரும் மோகனாவை தேடி கொண்டிருக்கவும், அம்மாசையை கொன்று, இறந்தது தான்தான் என்று நிரூபிக்க முயன்றார் மோகனா.

advertisement by google

ராஜவேலுஇதற்கு ராஜவேலுவுடன் சேர்ந்து அம்மாசையை கொன்று, சுடுகாட்டில் புதைத்தனர். இது சம்பந்தமான வழக்கு கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. மோகனா, ராஜவேல் உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்த கோர்ட், தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், டிரைவர் பழனிசாமிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்கி நீதிபதி முகமதுபாரூக் உத்தரவிட்டார்.

மேலும் 3 பேருக்கும் 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும் வழங்க உத்தரவிட்டார்.மோசடிஇந்த நிலையில் மோகனா குறித்து பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஒடிசா மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார் மோகனா.. 12 கோடி ரூபாய் வரை அங்கு மோசடி செய்துள்ளாராம். அதனால் அங்குள்ள போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்து மோகனாவை தேடி வந்துள்ளனர்.. மனைவியை காப்பாற்ற, அம்மாசையை கொலை செய்ய ஐடியா தந்ததே ராஜவேல்தானாம்.கொலைசம்பவத்தன்று, சொத்து விஷயமாக பேசிவிட்டு, அவசரமாக சென்னை செல்லவிருப்பதாக அம்மாசை வக்கீல் ராஜவேலுவிடம் சொன்னாராம்.. அந்த அவசரத்திலும் மனமில்லாமல் கொலையை செய்துள்ளார் கிரிமினல் ராஜவேல்… அம்மாசையின் கழுத்தை, கார் டிரைவர் பழனிசாமியின் உதவியுடன் நெரித்து கொன்றுள்ளார்.. பிறகு சடலத்தை காட்டி, தன்னுடைய மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி உள்ளார்.. அந்த சர்டிபிகேட்டை வைத்து கொண்டு, சுடுகாட்டில் எரித்துள்ளார்.. அதற்கும் மாநகராட்சியிடம் இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார்.இரட்டை ஆயுள்இதனிடையே, மனைவி பெயரில் புதிதாக ஒரு சொத்து வாங்க வேண்டும் என்றும், தன் மனைவி உயிரோடு இருப்பதாக சர்டிபிகேட் கேட்டு ராஜவேல் போலீசில் விண்ணப்பிக்கும்போதும்தான் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.. எப்படி ஒரு பெண்ணுக்கு இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிழ் இரண்டுமே இருக்க முடியும் என்று போலீசார் சந்தேகப்பட்ட ராஜவேலுவை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான் தம்பதி சிக்கி கொண்டனர்.

இப்போது இரட்டை தண்டனையை இவர்கள் அனுபவிக்க தொடங்கி உள்ளனர்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button