இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்விளையாட்டு

வெளிநாட்டு வாழ்க்கையின் சோகங்கள் அடுத்த தலைமுறையாவது நம்வூரில் வாழட்டும்? எடுத்து சொல்லும் உண்மைநிலவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

வெளிநாட்டு வாழ்க்கையின் சோகங்கள் தயவுசெய்து அடுத்த தலைமுறையையாவது ஊரில் வாழட்டும்…

advertisement by google

இரவு குளிரில் நடுங்கும் நாய் நினைக்குமாம் கண்டிப்பாக விடிந்தவுடன் ஒரு போர்வை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று, மறுநாள் காலையில் வெயிலைப் பார்தததும் போர்வை வாங்க வேண்டும் என்பதையே மறந்து விடுமாம். அன்று இரவு மீண்டும் நினைக்குமாம் நாளைக்குக் கண்டிப்பாக போர்வை வாங்க வேண்டும் என்று. இப்படியே ஒவ்வொரு இரவும் நினைக்குமாம் அந்த நாய், கிராமங்களில் இப்படியொரு கதை சொல்வார்கள். அதைப் போன்றது தான் வெளிநாட்டுவாசிகளின் வாழ்க்கை!

advertisement by google

குடும்பத்தை, குழந்தைகளை விட்டு கண்ணீருடன் விமானம் ஏறுபவர்கள் இது தான் என்னுடைய இறுதிப் பயணம் அடுத்த முயற்சி ஊரிலே செட்டில் ஆவது தான் என்று நினைப்பவர்கள் வெளிநாடு வந்ததும் அதற்கான முயற்சியை எடுக்காமல் வேறு பல காரியங்களில் பணத்தை செலவாக்கி விட்டு காலத்தை ஓட்டி விட்டு அடுத்த விடுப்பில் ஊருக்குச் செல்வார்கள். மீண்டும் மேலே குறிப்பிட்டதைப் போல் நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்புவார்கள். இப்படியே 15 முதல் 25 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே இளமையைத் தொலைத்து விட்டு போனஸாக சுகர், பிரசர், சொட்டைத் தலை, உடல் பருமன் இன்னும் ஏராளமான நோய்களைப் பெற்றுக் கொண்டு 45க்கு மேல் சிலர் 50 க்கு மேல் ஊருக்கு திரும்புவார்கள். திருமணம் முடிந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதில் குடும்பத்துடன் இருந்த நாட்கள் 3 முதல் 4 வருடங்கள், ஆக சராசரியாக 60 வயதுக்குப் பிறகு மரணிக்கப் போகும் மனிதர்கள் சந்தோசமாக குடும்பத்துடன் வாழ்வது சொற்பத்திலும் சொற்பம்!

advertisement by google

இதில் வெளிநாட்டிற்குக் குடும்பத்தை அழைத்து வந்து வைத்துக் கொண்டு 4 சுவற்றுக்குள் வார நாட்களையும் வார விடுமுறையில் ஷாப்பிங் மால்களில் சுற்றி விட்டு கலர்கலராகக் கிரடிட் கார்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு கடன் மேல் கடன் அதை அடைக்க இன்னொரு கடன் என்று ஆடம்பரமாக வாழ்ந்து விட்டு இங்கே எதற்காக வந்தோம் என்பதை மறந்து பல வருசத்தை கழித்து விட்டு ஊருக்குச் செல்கையில் வெறும் கையுடன் செல்பர்களும் உண்டு!

advertisement by google

(மேலே சொன்னதில் மிகச் சிலர் விதிவிலக்காக இருக்கலாம் )

advertisement by google

இதற்கெல்லாம் காரணம் வாழ்வதென்றால் பணம் சம்பாதிப்பது தான் என்று நினைப்பது தான். அதிலும் அதை வெளிநாட்டில் தான் சம்பாதிக்க முடியும் என்று நினைப்பதும், ஒரு மனிதனுக்கு சந்தோசம் என்பது எது என்பதைப் பற்றிய தவறானப் புரிதல்

advertisement by google

எல்லாம் சரி! ஊரிலே இருந்தால் சொத்துக்கள் வாங்கி செட்டில் ஆக முடியுமா வசதியாக வாழ முடியுமா?

அப்படியானால் ஊரிலே தொழில் செய்பவர்கள் சொத்தெல்லாம் வாங்கி வசதியாக வாழ்கிறார்களே எப்படி?

சரி வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் எல்லாரும் சொத்துபத்துக்கள் வாங்கி வசதியாக வாழ்கிறார்களா? பல வருடத்தை வெளிநாட்டில் கழித்தவர்கள் இன்னும் அதே நிலையில் இருப்பது ஏன்?

இந்தியா, இலங்கையில் கோடிக்கணக்கான மக்கள் பிழைக்கிறார்கள் இதில் வெளிநாட்டு சம்பளத்தை இன்னும் அதைவிட அதிகமாய் சொந்த நாட்டிலேயே சம்பாதிக்கிறார்கள் வசதியாக வாழ்கிறார்கள், அதெப்படி?

இதற்கெல்லாம் காரணம் நாம் எடுக்கும் முயற்சியும் நாம் பயணிக்கும் பாதையுமே .

வெளிநாட்டில் சம்பாதித்த வசதியானவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு அயல்நாட்டை நோக்கி ஓடுபவர்கள் இந்தியாவிலேயே தொழில் செய்து முன்னேறியவர்களை ஓர் உதாரணமாக எடுப்பதில்லை என்பதே இதற்குக் காரணம்!

சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு சிறியதாய் தொடங்கிய தொழில்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீட்டில் அடுப்பு எரியக் காரணமாகி பெரும் தொழிலாக வளர்ந்து இலட்சங்களில், கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது.

வெளிநாட்டில் சம்பாதிப்பது அத்தனை எளிதல்ல! இதில் பெற்றதை விட இழந்தது ஏராளம்!

30 நாள் விடுப்பில் வந்து திருமணம் செய்து விட்டுப் பயணம்!

தனக்குப் பிறந்த குழ்ந்தையைக் காண இயலாத அவலம்!

இறக்கும் தருவாயில் இருக்கும் பெற்றோரகளின் பக்கத்தில் இருக்க இயலாத கொடுமை!

கண்டிக்கத் தகப்பன் இல்லாததால் கெட்டப் பழக்கத்தில் விழுந்து தறுதலையாய்ப் போகும் மகன் !

சொந்தப் பிள்ளைகளின் திருமணத்தை வெளிநாட்டிலிருந்து வீடியோகாலில் பார்த்து ஏங்கும் தந்தை!

விமான நிலையத்தில் கண்ணீரை விட்டுக் கதறும், மனைவி, குழந்தைகள் அதைத் தாங்க முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு நடைப்பிணமாய் விமான நிலையத்துக்குள் கடந்து செல்லும் தகப்பன்..

இதுபோன்று கொடுமைகள் ஏராளம்…

இந்தியாவை விட மக்கள் தொகையை அதிகம் வைத்திருக்கும் சீனர்களை வெளிநாடுகளில் எங்கேயாவது வீட்டு ட்ரைவர் வேலையிலோ அல்லது ஆடுமாடு மேய்க்கும் வேலையோ அல்லது குறைந்த சம்பளத்தில் கடினமான கட்டுமான வேலை செய்யும் வேலையிலோ அல்லது அடிமாட்டு சம்பளத்தில் எஞ்சினியராகப் பார்த்து இருக்கிறீர்களா?

இல்லையல்லவா ஏன்?

ஏனென்றால் அவர்கள் பல பொருட்களைத் தயாரிப்பதிலும் வியாபாரம் செய்வதிலும் ஒரு உயரத்தை அடைந்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? இந்தியாவில் சில சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் குண்டூசி முதல் வைரம் வரை அனைத்து வித வியாபாரம் செய்கிறார்கள். இளம் வயதிலேயே பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு வெளிநாட்டிற்குச் செல்ல ட்ராவல் ஏஜென்டுகளைத் தேடி அலைவதில்லை, பல தொழில்களிலும் கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

எதையாவது சொல்லிக் கொண்டு வெளிநாடே கதி என்று இருக்கவில்லை!

அனைவரும் வேலை தேடியே அலைந்தால் யார் தான் அனைவருக்குமான வேலையை உருவாக்குவது?

தயவுசெய்து அடுத்த தலைமுறையை யாவது ஊரில் வாழ விடுங்கள்

பாவம் வெளிநாட்டுவாசிகள்.

உங்களது பிள்ளைகளையும் இப்படிக் கஷ்டப்படுத்தப் போகிறீர்களா..

advertisement by google

Related Articles

Back to top button